Published:Updated:

நாகப்பட்டினம்: முக்கியமான நிறுத்தங்களைத் தவிர்க்கும் பேருந்துகள்... அவதிக்குள்ளாகும் மக்கள்!

நாகப்பட்டினம்

பெருமாள் கோயில், பழைய பேருந்து நிலையம், நாலுகால் மண்டபம், எல்.ஐ.சி ஆகிய பகுதிகள் நாகப்பட்டினத்தின் மிகவும் முக்கியமான பகுதிகள்.

நாகப்பட்டினம்: முக்கியமான நிறுத்தங்களைத் தவிர்க்கும் பேருந்துகள்... அவதிக்குள்ளாகும் மக்கள்!

பெருமாள் கோயில், பழைய பேருந்து நிலையம், நாலுகால் மண்டபம், எல்.ஐ.சி ஆகிய பகுதிகள் நாகப்பட்டினத்தின் மிகவும் முக்கியமான பகுதிகள்.

Published:Updated:
நாகப்பட்டினம்
தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் குறிப்ப்பிட்ட சில நிறுத்தங்களை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டுச் செல்வதால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்துக்கு மேற்கண்ட ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களிலிருந்தும் வரும் சில அரசுப் பேருந்துகள் மற்றும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் பெருமாள் கோயில், பழைய பேருந்து நிலையம், நாலுகால் மண்டபம், எல்.ஐ.சி., ஸ்டார் தியேட்டர் ஆகிய நிறுத்தங்களின் வழியாக புதிய பேருந்து நிலையத்தைச் சென்றடைவதில்லை. மேல கோட்டைவாசல் தெரு வழியாக நேரடியாக ஸ்டார் தியேட்டர் நிறுத்தத்தைச் சென்றடைகின்றன.

மேல கோட்டை வாசல்
மேல கோட்டை வாசல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நான்கு நிறுத்தங்களுக்குச் செல்லவேண்டிய மக்களை மேல கோட்டை வாசல் பகுதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் மேற்கண்ட நிறுத்தங்களைச் சென்றடைவதற்கு மீண்டும் தனியாக வேறு பேருந்தில் பணம் செலவு செய்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லார் ரஃபிக் என்பவர் பேசும்போது,

``பெருமாள் கோயில், பழைய பேருந்து நிலையம், நாலுகால் மண்டபம், எல்.ஐ.சி ஆகிய பகுதிகள் நாகப்பட்டனத்தின் மிகவும் முக்கியமான பகுதிகள். இந்த நிறுத்தங்கள் உள்ள பகுதிகளில்தான் பல மருத்துவமனைகள், வங்கிகள், இன்னும் சில முக்கியமான அலுவலகங்கள், நகர்க் காவல் நிலையம், நாகப்பட்டினம் கடைத்தெரு ஆகியவை இருக்கின்றன. மேலும், நாகப்பட்டினம் -அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பொய்கைநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும், அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்துக்கும் செல்வதற்கு பழைய பேருந்து நிலையம்தான் அருகில் இருக்கிறது. பல பேருந்துகள் இந்த வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழித்தடத்தில் செல்வதால் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கலெக்டரின் பதில்
கலெக்டரின் பதில்

இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முகநூல்வாயிலாக மனு அளித்தேன். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து, "அனைத்துப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாகவே புதிய பேருந்து நிலையம் சென்று வர வேண்டும்" என்று மேல கோட்டை வாசல் நிறுத்தத்தில் அறிவுறுத்தல் பலகை வைக்க ஏற்பாடு செய்தார். ஆனாலும், இன்னும் பல பேருந்துகள் அந்த அறிவுறுத்தல் பலகையைப் பொருட்படுத்தாமல் மேல கோட்டைவாசல் வழியாகவே புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்கின்றன'' என்கிறார் ஆதங்கத்தோடு.

இந்தப் பேருந்து வழித்தடப் பிரச்னை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகக் கண்காணிப்பாளரிடம் பேசினோம்.

``மேல கோட்டைவாசல் தெரு வழியாக நேரடியாகப் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல, ஓரிரு சிற்றுந்துகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறோம். ஆனால், பெரும்பாலான பேருந்துகள் அப்படிச் செல்வதாக புகார்கள் வந்துள்ளன. விதியை மீறி நேரடியாக புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த சில பேருந்துகளைக் கைப்பற்றி நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காது'' என்று உறுதியளித்தார்.

அறிவிப்புப் பலகை
அறிவிப்புப் பலகை

ஆனால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வாக மேல கோட்டைவாசல் தெரு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புக்கம்பி அமைக்க வேண்டும் என்றும், அந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக அறிவிக்க வேண்டும்; இல்லையென்றால் அந்தச் சாலையில் இதைக் கண்காணிக்க காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்குமா அரசு?