Published:Updated:

``MP, MLA பணியைத்தான் செய்கிறோம்; நமக்கும் ரூ.50,000 சம்பளம் வேண்டும்”-கவுன்சிலர் பேச்சால் சிரிப்பலை

மாநகராட்சிக் கூட்டத்தில் பேசும் மேயர் மகேஷ்

'நான் சட்டப்படிப்பு படித்து முடித்து, அரசு பஸ்ஸில் வந்து வழக்கறிஞர் பணி செய்தேன். சொந்த உழைப்பால் முதன்முதலாக லேம்பி ஸ்கூட்டர் வாங்கினேன். கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவன் நான்' எனப் பேசினார் நாகர்கோவில் மேயர் மகேஷ்.

``MP, MLA பணியைத்தான் செய்கிறோம்; நமக்கும் ரூ.50,000 சம்பளம் வேண்டும்”-கவுன்சிலர் பேச்சால் சிரிப்பலை

'நான் சட்டப்படிப்பு படித்து முடித்து, அரசு பஸ்ஸில் வந்து வழக்கறிஞர் பணி செய்தேன். சொந்த உழைப்பால் முதன்முதலாக லேம்பி ஸ்கூட்டர் வாங்கினேன். கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவன் நான்' எனப் பேசினார் நாகர்கோவில் மேயர் மகேஷ்.

Published:Updated:
மாநகராட்சிக் கூட்டத்தில் பேசும் மேயர் மகேஷ்

நாகர்கோவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த ரெ.மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் மேயர் ரெ.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மேயர் ரெ.மகேஷ், "வடசேரியில் ரோட்டோரத்தில் கீரை விற்கும் அம்மா ஒருவரை அங்கு கீரை விற்கக் கூடாது என அதிகாரிகள் கூறியதாக அறிந்தேன். அந்த அம்மாவுக்கு உழவர் அடையாள அட்டை கொடுத்து, உழவர் சந்தையில் கீரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

இன்று நான் இன்னோவா காரில் வருகிறேன் என்பதால் ஏழைகளின் கஷ்டம் தெரியாது என நினைக்காதீர்கள். 1990-ல் நான் சட்டப்படிப்பு படித்து முடித்து, அரசு பஸ்ஸில் வந்து வழக்கறிஞர் பணி செய்தேன். சொந்த உழைப்பால் முதன்முதலாக லேம்பி ஸ்கூட்டர் வாங்கினேன். அதன் பிறகு ஒரு டி.வி.எஸ் பைக் வாங்கினேன். படிப்படியாக முன்னேறி மாருதி கார் வாங்கினேன். இதுவரை சுமார் ஏழு கார்கள் மாற்றிவிட்டேன். கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவன் நான். கீரை விற்கும் அம்மாவைப் பார்க்கும்போது என் அம்மாவின் எண்ணம்தான் எனக்கு வந்தது. என் அப்பாவை நான் பார்த்தது இல்லை. என் அப்பா இல்லாமல் தாய் என்னைப் படிக்கவைத்தார். இன்று நான் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாதான் காரணம்.

மாநகராட்சி கவுன்சிலர்கள்
மாநகராட்சி கவுன்சிலர்கள்

எந்த விஷயத்திலும் நான் உங்களுக்கு எதிராகச் செயல்படவிரும்பவில்லை. மாநகர வளர்ச்சிக்காக, மாநகரைச் சுத்தப்படுத்தி மாற்றியமைக்க அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நாம் வீசி எறியும் முன்பு வலம்புரிவிளை உரக்கிடங்கில் குப்பைகளால் எவ்வளவு பெரிய பிரச்னை உள்ளது என்பதைப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். நெகிழி இல்லாத நாகர்கோவில் மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" எனப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் நடந்த விவாதத்தில் கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா பேசும்போது, "சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களுக்கு தரமான சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். மாநகராட்சி கவுன்சிலரான நாமும் அந்தப் பணியைத்தான் செய்கிறோம். எம்.எல்.ஏ., எம்.பி-க்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளமும், இன்னபிற சலுகைகளும் இருக்கின்றன.

மாநகராட்சி கூட்டத்தில் பேசும் மேயர் மகேஷ்
மாநகராட்சி கூட்டத்தில் பேசும் மேயர் மகேஷ்

நீங்க கவர்ல எங்களுக்கு 800 ரூபாய் வைத்திருக்கிறீர்கள். இது ஒருமுறை பெட்ரோல் போட்டு சுத்துறதுக்குப் போதாது. மாநகராட்சி அலுவலகத்தைவிட்டு வெளியே போவதற்குள் இந்தப் பணம் தீர்ந்துவிடும். எனவே கவுன்சிலர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கித்தர வேண்டும்" என்றார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism