Published:Updated:

``எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான்” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

``எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி நட்புறவுடன் இருந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது பாஜக தான்” என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

``எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான்” - நயினார் நாகேந்திரன்

``எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி நட்புறவுடன் இருந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது பாஜக தான்” என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க உடன் கூட்டணி தொடரும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்தான். அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னையை யார் ஆரம்பித்தார்கள் என்று எல்லோருக்குமே தெரியும். இது இ.பி.எஸ், ஓ.பி.எஸுக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்னை. எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சர் ஆக்கியதே பா.ஜ.கதான். தொடர்ந்து அவருடன் நட்புறவாய் இருந்து அனைத்து அவருக்கு உதவிகளையும் செய்துகொடுத்தது பா.ஜ.கதான்.

தற்போது தி.மு.கவின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் மணல், கற்கள் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு யூனிட் மணல் 15,000 முதல் 20,000 வரை விற்கப்படுகிறது. இதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

``எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான்” - நயினார் நாகேந்திரன்

அக்னிபத் திட்டம் ஒரு அருமையான திட்டம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அது போன்று இல்லை. இளைஞர்கள் விருப்பப்பட்டு அக்னிபத் திட்டத்தில் சேரலாம். இது இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு” என தெரிவித்தார்.

மேலும் ``ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பா.ஜ.க போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால் இப்போது போராட்டம் என்று அறிவித்தாலே மக்கள் வெற்றியாக கருதுகிறார்கள். பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொள்கிறார்கள்" என்றார்.