Published:Updated:

``சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்" - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

``சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும்" என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

``சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்" - நயினார் நாகேந்திரன்

``சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும்" என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன்

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது அவர், ``பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்திருந்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என்று கூறினார். தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்று கூறினால் தான் புரியும்.

இதுகுறித்து நான் சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பினேன். ஒன்றிய அரசு என்று கூறுவதை அவர்கள் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள். திமுக அரசு தன்னை பெருமைப்படுத்தி கொள்வதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. மாறாக மக்களின் நலனில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

சசிகலா
சசிகலா

மத்திய அரசு தேவையான நேரத்தில் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிதிகளை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் திமுக அரசு மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றவர் சசிகலா குறித்து பேசினார். ``சசிகலாவை அதிமுக சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி இன்னும் வலுவாக இருக்கும். சசிகலா எங்கள் கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயமாக அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சசிகலா அதிமுக-வுக்கு வரவில்லை என்றால் நாங்கள் பாஜக-வுக்கு வரவேற்போம்'' என்றார்.

நயினார் நாகேந்திரன் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism