Published:Updated:

``நீங்கள் அடிக்கடி வந்தால் நல்ல சாலைகள் கிடைக்கும்!" - முதல்வர் மேடையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

நயினார் நாகேந்திரன் ( பா.சுகேஷ் )

``பொதுவாக முதல்வர்கள் சரித்திரத்தில் இடம்பிடிப்பதற்காக எதையாவது செய்வார்கள். முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் சரித்திரம் படைக்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

``நீங்கள் அடிக்கடி வந்தால் நல்ல சாலைகள் கிடைக்கும்!" - முதல்வர் மேடையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

``பொதுவாக முதல்வர்கள் சரித்திரத்தில் இடம்பிடிப்பதற்காக எதையாவது செய்வார்கள். முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் சரித்திரம் படைக்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன் ( பா.சுகேஷ் )

நெல்லை மாவட்டத்தில் முடிவடைந்த அரசுப் பணிகளைத் தொடங்கிவைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 30,687 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அரசு விழா
அரசு விழா

இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கண்ணப்பன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் நெல்லை சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் பேசுகையில், ``எதிர்க்கட்சி என்றுகூடப் பார்க்காமல் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்துவருகிறார். நெல்லை தொகுதிக்கு கலைக் கல்லூரி கொடுத்திருக்கிறார். பொதுவாக முதல்வர்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்க எதையாவது செய்வார்கள், முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் சரித்திரம் படைக்கும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

அரசுவிழாவில் பங்கேற்ற பயனாளிகள்
அரசுவிழாவில் பங்கேற்ற பயனாளிகள்

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு- பாபநாசம் அணைகளை சுரங்கம் மூலம் இணைக்க வேண்டும். அப்படிச் சேர்த்துவிட்டால் இந்தப் பகுதி மக்களுக்கு எல்லா நேரமும் தண்ணீர் கிடைத்துவிடும். இது மத்திய அரசு நிதி கொடுக்கவேண்டிய திட்டமாக இருந்தாலும்கூட, மாநில அரசு முயன்றால் நடக்கும்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்திருக்கிறார்கள். சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய பகுதி இது. நவ கைலாயமும், நவ திருப்பதியும் இந்த மாவட்டத்தில்தான் இருக்கின்றன. அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த பகுதியாக இந்த மாவட்டம் இருக்கிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்டத்தின் மானூர் குளம் என்பது சில சிறிய அணைகளைவிடவும் பல மடங்கு பெரியது. அந்தக் குளம் நிறைந்துவிட்டால் விவசாயிகளுக்கு நெல் விளைவிக்க எந்த பாதிப்பும் வராது. அதனால் முதல்வர் கவனம் செலுத்தி பாபநாசம் அணையிலிருந்து அந்தக் குளத்துக்குத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆறு மருத்துவர்கள் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலையில், மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் கூடுதலாக மூன்று மருத்துவர்களைப் பணியில் அமர்த்தி இதய அறுவை சிகிச்சை நடைபெற உதவ வேண்டும்.

அரசு விழா நடந்த இடம்
அரசு விழா நடந்த இடம்

முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு அடிக்கடி வருகை தர வேண்டும். நீங்கள் வந்தால் சாலைகளெல்லாம் புதிதாகப் போடுகிறார்கள். அதனால் நீங்கள் அடிக்கடி வந்தால்தான் மக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும்” என்று பேசினார். நயினார் நாகேந்திரன் பேச்சை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மேடையில் இருந்த அனைவரும் கூர்ந்து கவனித்தார்கள்.