Published:Updated:

``பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது’’ - நயினார் நாகேந்திரன்

வா.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த நயினார் நாகேந்திரன்

``அனைத்துப் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் திருமணம். அதனால் தாலிக்குத் தங்கம் வழங்கும் என்பது முக்கியமானது. அதை நிறுத்தியிருப்பது வருத்தத்துக்கு உரியது. அந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும்" என்கிறார், நயினார் நாகேந்திரன்.

``பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது’’ - நயினார் நாகேந்திரன்

``அனைத்துப் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் திருமணம். அதனால் தாலிக்குத் தங்கம் வழங்கும் என்பது முக்கியமானது. அதை நிறுத்தியிருப்பது வருத்தத்துக்கு உரியது. அந்தத் திட்டத்தைத் தொடர வேண்டும்" என்கிறார், நயினார் நாகேந்திரன்.

Published:Updated:
வா.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த நயினார் நாகேந்திரன்

கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உசிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லையில் உள்ள அவரின் மணிமண்டபத்தில் அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம் உள்ளிட்ட பலரும் அங்குள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”முதலமைச்சர் அறிவித்தபடி வ.உ.சி மணிமண்டபத்தில் அவரின் வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒளி-ஒலிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். அ.தி.மு.க பல பிரிவுகளாக இருக்கின்றன. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதனால் அக்கட்சியின் கொறடா கொடுத்த மனு தொடர்பாக உரிய நேரத்தில் யார் சட்டமன்ற துணைத் தலைவர் என்பது முடிவு செய்யப்படும். அதோடு, இந்தப் பிரச்னை நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயா சங்கர் உள்ளிட்ட கட்சியினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி
செய்தியாளர்களுக்கு பேட்டி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ``தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் என்பது அனைத்துப் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அந்தத் திட்டத்தைக் கண்டிப்பாகத் தொடர வேண்டும். வரும் 8-ம் தேதி நெல்லைக்கு வரும் முதல்வரிடம் அதை பா.ஜ.க சார்பில் வலியுறுத்துவேன்.

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வருத்தத்துக்கு உரியது. ஆனாலும் மறுபக்கம் இருந்து வரக்கூடிய கருத்துக்குப் பதில் சொல்லும் சூழல் ஏற்படுகிறது. அத்தகைய சூழலை யார் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம்.

பா.ஜ.க-வினர் மாலை அணிவித்து மரியாதை
பா.ஜ.க-வினர் மாலை அணிவித்து மரியாதை

அண்ணாமலை அதிரடியாகப் பேசுவதாகச் சொல்கிறீர்கள், யாராவது அடிக்க வந்தால் கண் இமை தானாக மூடிக்கொள்ளும். அத்தகைய அனிச்சைச் செயலைத் தான் அவர் செய்திருப்பார். தமிழ்நாட்டில் யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றியைக் கைப்பற்றும்” என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.