Published:Updated:

``டாஸ்மாக்கை லாபத்தில் நடத்தும் அரசால், டேன்டீயை ஏன் லாபகரமாக இயக்க முடியவில்லை?" - சீமான் ஆவேசம்

சீமான்

``தாயகம் திரும்பிய இந்த மண்ணின் மக்களான டேன்டீ தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் தினக்கூலி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த அரசு." - சீமான்

``டாஸ்மாக்கை லாபத்தில் நடத்தும் அரசால், டேன்டீயை ஏன் லாபகரமாக இயக்க முடியவில்லை?" - சீமான் ஆவேசம்

``தாயகம் திரும்பிய இந்த மண்ணின் மக்களான டேன்டீ தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் தினக்கூலி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த அரசு." - சீமான்

Published:Updated:
சீமான்

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மக்களுக்காக கோவை, நீலகிரி மாவட்டங்களில் `டேன்டீ' எனப்படும் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்டம் நிறுவப்பட்டது. இந்த நிலையில், ஆள்பற்றாக்குறை, நஷ்டம் காரணமாக டேன்டீ வசமிருக்கும் தேயிலைத் தோட்டத்தின் சில பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. அரசின் இந்த முடிவை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன.

சீமான்
சீமான்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``இந்தப் பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் 400 கோடி ரூபாய். கடந்த தீபாவளியின்போது 1,000 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்திருக்கிறது. வெளியில் சொன்னால் பிரச்னை என மறைத்து 600 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை என கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.

சீமான்
சீமான்

தாயகம் திரும்பிய இந்த மண்ணின் மக்களான டேன்டீ தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் தினக்கூலி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த அரசு. ஆயிரக்கணக்கான தற்காலிகத் தொழிலாளர்களை இவர்களே கட்டாய வேலை நிறுத்தம் செய்துவிட்டு ஆள்பற்றாக்குறை என நாடகமாடுகிறார்கள். நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி வனத்துறை வசம் ஒப்படைக்கவிருக்கிறார்கள். இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டாஸ்மாக்கை நல்ல லாபத்தில் நடத்தும் இந்த அரசுக்கு டேன்டீயை ஏன் லாபத்தில் இயக்க முடியவில்லை?" என்றார்.