Published:Updated:

``தனிநாடு கேட்கவைத்து விடாதீர்கள்" - நாமக்கல் மாநாட்டில் பொங்கிய ஆ.ராசா

மேடையில் ஆ.ராசா

நாமக்கல்லில் நடைபெற்ற தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், 'மாநில சுயாட்சி தாருங்கள். எங்களைத் தனிநாடு கேட்கவைத்து விடாதீர்கள்' என்று ஆ.ராசா கருத்து தெரிவித்திருக்கிறார்.

``தனிநாடு கேட்கவைத்து விடாதீர்கள்" - நாமக்கல் மாநாட்டில் பொங்கிய ஆ.ராசா

நாமக்கல்லில் நடைபெற்ற தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், 'மாநில சுயாட்சி தாருங்கள். எங்களைத் தனிநாடு கேட்கவைத்து விடாதீர்கள்' என்று ஆ.ராசா கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மேடையில் ஆ.ராசா

நாமக்கல் டு சேலம் சாலையிலுள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டை, தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். சென்னை மாநகராட்சிபோல் முகப்பில் செட் அமைத்திருந்தார்கள்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு

மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு சைவம், அசைவம் என மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, சுபவீரபாண்டியன், திருச்சி சிவா, மா.சுப்பிரமணியன், பர்வீன் சுல்தானா உள்ளிட்டோரும் பல்வேறு தலைப்புகளிலும் பேசினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற தலைப்பில் பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ``’பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். பேட்ஜ் அணிந்துகொள்ளுங்கள். சுதந்திரத் தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்துக்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

மேடையில் ஆ.ராசா
மேடையில் ஆ.ராசா

அதனால், பா.ஜ.க அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணாவழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று ஆவேசமாகப் பேசினார்.