Published:Updated:

'ஒரு வார்டும் போச்சே...’, 'ஆப்சன்ட்' தங்கமணி, `ஆஃப்லைன்’ பாஸ்கர்! - புலம்பும் நாமக்கல் அதிமுக-வினர்

தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க கவுன்சிலர் ரோஜா ரமணி

தி.மு.க சார்பில் சீட் தராததால், அ.தி.மு.க-வில் இணைந்து, அந்தக் கட்சி சார்பில் நின்று ரோஜா ரமணி வெற்றிபெற்றார். இந்த நிலையில்...

'ஒரு வார்டும் போச்சே...’, 'ஆப்சன்ட்' தங்கமணி, `ஆஃப்லைன்’ பாஸ்கர்! - புலம்பும் நாமக்கல் அதிமுக-வினர்

தி.மு.க சார்பில் சீட் தராததால், அ.தி.மு.க-வில் இணைந்து, அந்தக் கட்சி சார்பில் நின்று ரோஜா ரமணி வெற்றிபெற்றார். இந்த நிலையில்...

Published:Updated:
தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க கவுன்சிலர் ரோஜா ரமணி

அ.தி.மு.க., நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் அதிமுக ஒரே ஒரு வார்டை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், 'ஒத்தை அ.தி.மு.க கவுன்சிலராக இருந்து ஒன்றும் செய்ய முடியாது' என்று தி.மு.க-வில் இணைந்து, அ.தி.மு.க-வினரை அதிரவைத்திருக்கிறார்.

தங்கமணி
தங்கமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக கோட்டையாக இருந்த நாமக்கல், மெல்ல மெல்ல தி.மு.க கோட்டையாக மாறிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 5 நகராட்சிகளில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய 4 நகராட்சிகளை தனிப்பெரும்பான்மையுடம் திமுக கைப்பற்றியிருக்கிறது. குமாரபாளையம் நகராட்சியை சுயேச்சை கவுன்சிலர் விஜய்கண்ணன் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தின் தலைமை பீடமான நாமக்கல் நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க-வை 'ஒயிட் வாஷ்' செய்துள்ளது. நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில், தி.மு.க 36 வார்டுகளைக் கைப்பற்றியது. தவிர, சுயேச்சைகள் 2, அ.தி.மு.க 1 வார்டு எனக் கைப்பற்றினர். கடைசியில், சுயேச்சைகள் இருவரும் தி.மு.க-வில் இணைய, தி.மு.க-வின் எண்ணிக்கை 38 ஆனது. 'அப்பாடா, ஒரு வார்டாச்சும் தப்பிச்சுதே' என்று அ.தி.மு.க-வினர் மகிழ்ந்த நிலையில், அந்த ஒரு கவுன்சிலரும் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்து, அந்தக் கட்சியில் ஐக்கியமாகி, அ.தி.மு.க-வினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறார். 29-வது வார்டில் வெற்றிபெற்ற ரோஜா ரமணி, தி.மு.க-வைச் சேர்ந்தவர்தான். ஆனால், தி.மு.க சார்பில் சீட் தராததால், அ.தி.மு.க-வில் இணைந்து, அந்தக் கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்றார்.

கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளர்)
கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளர்)

இந்த நிலையில், 'அ.தி.மு.க-வில் ஒத்தை ஆளாக இருந்து செயல்பட முடியாது' என்று கூறி, நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தனது 'தாய்க்கழகமான' தி.மு.க-வில் இணைந்துவிட்டார். இதனால், நாமக்கல் அ.தி.மு.க-வினர், 'ஒரு வார்டும் போச்சே' என்று அங்கலாய்க்கின்றனர்.

``நாமக்கல் நகராட்சியில் வாஷ் அவுட் ஆனதோடு, மாவட்டம் முழுக்கப் பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சிகளை அ.தி.மு.க இழந்துள்ளது.

இதற்குக் காரணம், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரான தங்கமணியும் சரியாகத் தேர்தல் பணியாற்றாததுதான். உடல்நிலையைக் காரணம் காட்டி, குமாரபாளையத்திலேயே இருந்துவிட்டார் என்கிறார்கள் கட்சியினர். நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வாஷ் அவுட் ஆனதற்குக் காரணம், அ.தி.மு.க நகரச் செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் வேலை பார்க்காததுதான். கடந்த 2011-லிருந்து 2021 வரை இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஜெயிக்கவைக்க எந்த முயற்சியும் எடுத்துக்கலை. செலவும் பண்ணலை. இப்படியே போனால், இனி நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு தேய்பிறை மட்டும்தான். வளர்பிறை கிடையாது" என்று அ.தி.மு.க-வினர் வெடிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism