Published:Updated:

`சாதியை வைத்து அரசியல் செய்கிறேனா?' - தங்கமணிக்கு எதிராகக் கொதிக்கும் நாமக்கல் எம்.பி

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதுபோல், சாதியை வைத்து நான் அரசியல் செய்யவில்லை என்று நாமக்கல் எம்.பி சின்ராஜ், அமைச்சர் தங்கமணிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், "லாரிகளில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்றது குறித்து வந்த தகவலின் அடிப்படையில்தான், லாரிகளைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தேன். ஆனால், லாரி கரூர் மாவட்டத்திலிருந்து வந்ததாகத் தெரியவந்தது. எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் என்றாலும், தக்க நடவடிக்கை எடுக்குமாறுதான் லியுறுத்தி வருகிறேன். அமைச்சர் தங்கமணி கூறியதுபோல, சாதியை வைத்து நான் அரசியல் நடத்தவில்லை.

Minister thangamani
Minister thangamani

அடுத்ததாக ஜேடர்பாளையம் காவிரியாற்றுப் பகுதியில் இருந்து, தனியார் நீரேற்று பாசன நிலையங்கள் தண்ணீர் எடுத்துச் செல்வது கொங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது என்றாலும், மற்ற விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், நீரேற்று பாசன நிலையங்கள் அனைத்தையும் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்.

``அத்து மீறினால்..!" - நாமக்கல் எம்.பி-யை எச்சரிக்கும் அமைச்சர் தங்கமணி

ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் வெல்லங்களில், சர்க்கரை கலக்கப்படுவதாகப் புகார் வந்துள்ளது. இதில், கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன். இதுகுறித்து உணவுப் பொருள் கலப்பட தடுப்புத் துறை அதிகாரியிடம் பேசியுள்ளேன்.

அமைச்சர் தங்கமணி கூறியதுபோல, சாதியை வைத்து நான் அரசியல் நடத்தவில்லை.
நாமக்கல் எம்.பி சின்ராஜ்

எத்தனை ஆலைகளில் சர்க்கரை கலப்படம் நடந்தாலும், அனைத்தையும் மூடி சீல் வைக்காமல் விடமாட்டேன். நான், என் சமூகத்துக்காக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளவில்லை. எந்தச் சாதியாக இருந்தாலும் எனது நடவடிக்கை தொடரும்'' என்று கூறினார்.லை. எந்தச் சாதியாக இருந்தாலும் எனது நடவடிக்கை தொடரும்'' என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு