Published:Updated:

முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம்: இறுதி நேரத்தில் அகற்றப்பட்ட ஃப்ளக்ஸ்! - நடந்தது என்ன?

கருணாநிதி பெயர் பலகையுடன் வணிக வளாகம்
News
கருணாநிதி பெயர் பலகையுடன் வணிக வளாகம்

`எங்க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவதா’ என அதிமுகவினர் கொதித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் அதனை பரப்பினர்.

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வணிக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி பெயரை வைப்பதற்கான ஏற்பாட்டை செய்து, அதன்படி முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என அச்சடிக்கப்பட்ட பெயர் பலகையினை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டதால் கருணாநிதி பெயர் அகற்றப்பட்டது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வணிக வளாகம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வணிக வளாகம்

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம் ஆகியவை இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் ரூ.29.93 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் புதிதாகக் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள் தலா ஒரு கண்காணிப்பு அறை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையத்தில் 434 இரு சக்கர வாகனங்கள், 61 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான நிறுத்துமிடம், 31 கடைகள், 8 உணவகங்கள் கொண்ட வகையில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளன. அதற்கு தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம் என பெயரிடப்பட்டிருந்தது. பணிகள் முடிந்த நிலையில் அவை திறப்பு விழாவிற்காக காத்திருந்தன.

பேருந்து நிலையம் திறப்பு விழாவில் கலெக்டர்,திமுக எம்.எல்.ஏக்கள்
பேருந்து நிலையம் திறப்பு விழாவில் கலெக்டர்,திமுக எம்.எல்.ஏக்கள்

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் வணிக வளாகத்திற்கு தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம் என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அதில் முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என்று ஃப்ளக்ஸ் அடித்து ஒட்டப்பட்டது/

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை அதிமுக தரப்பினர் மட்டுமின்றி மற்ற சில தரப்பினரும் விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சில மணி நேரம் கழித்து முத்துவேல் கருணாநிதி என அச்சிடப்பட்டு பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்த பிளக்ஸ் அகற்றப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

முத்துவேல் கருணாநிதி  பெயர் பலகை
முத்துவேல் கருணாநிதி பெயர் பலகை

தஞ்சாவூரில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா,மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அய்யாசாமி வாண்டையார் என்ற பெயர் உள்ள நிலையில், எதிரே கட்டப்பட்ட வணிக வளாகத்தை தஞ்சாவூர் மாநகராட்சி வணிக வளாகம் என பெயர் பலகை வைத்திருந்தனர்.

இந்நிலையில் பேருந்து நிலையம் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானதால் நேற்று இரவு மாநகராட்சி சார்பில் முத்துவேல் கருணாநிதி என பிளக்ஸ் அச்சடித்து வணிக வளாக போர்டில் ஒட்டினர். இதனை சிலர் போட்டோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். எங்க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவதா என அதிமுகவினர் கொதித்தனர். மேலும் கிண்டலடிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் அதனை பரப்பினர்” என்றார்.

திறப்பு விழா
திறப்பு விழா

இது குறித்து மாநகராட்சி தரப்பில் பேசினோம், ``வணிக வளாகத்திற்கு முத்துவேல் கருணாநிதி என்ற பெயர் வைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. வணிக வளாகம் குறித்த திறப்பு விழா அறிவிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் மத்தியில் கருணாநிதி பெயர் சூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் போர்டு தயார் செய்து வைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மேலிடத்திலிருந்து முறையான உத்தரவு வராததால் அந்த பெயர் பலகை அக்கற்றப்பட்டது” என்றனர்.