Published:Updated:

நாங்குநேரியில் நான்கு பக்கமும் தெறி!

கனிமொழி பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி பிரசாரம்

நாங்குநேரியில் இலையோடு மீண்டும் மோதுகிறது கை. அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணனும், காங்கிரஸ் வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரனும் களம் காண்கின்றனர்.

நாங்குநேரியில் நான்கு பக்கமும் தெறி!

நாங்குநேரியில் இலையோடு மீண்டும் மோதுகிறது கை. அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணனும், காங்கிரஸ் வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரனும் களம் காண்கின்றனர்.

Published:Updated:
கனிமொழி பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி பிரசாரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ் நாராயணன், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரி நாடார் ஆகியோருடன் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவதால், நாங்குநேரியில் நான்கு பக்கங்களிலும் தெறிக்கிறது தேர்தல் சூடு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1967 முதல் 2016 வரையிலான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே அதிகபட்சமாக ஆறு முறை ஜெயித்துள்ளது. அடுத்ததாக, அ.தி.மு.க ஐந்து முறை வென்றுள்ளது.

காங்கிரஸின் சாதனையை சமன் செய்யும் நோக்கில், தற்போது ஆளுங் கட்சியில் 16 அமைச்சர்கள் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் என, பெரும்கூட்டமே தொகுதியில் முகாமிட்டிருக்கிறது.

நாங்குநேரியில் நான்கு பக்கமும் தெறி!

அ.தி.மு.க., ‘உள்ளூர் வேட்பாளர்’ என்ற கோஷத்தை முன்வைக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி உள்ளூர் பேச்சாளர்கள் வரை ‘காங்கிரஸ், இறக்குமதி வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறது’ என்று பேசுகிறார்கள். ஆனால், கடந்த மூன்று தேர்தல்களிலும் நாங்குநேரியில் வெளியூர் வேட்பாளர்களே வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதே களம் சொல்லும் உண்மை. காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கும் ரூபி மனோகரன், தன்னை வெளியூர்க்காரர் என்பதை மறுக்கிறார். ‘‘இந்தத் தொகுதியில் நெருங்கிய உறவினர்கள் பலர் இருக்கின்றனர். என் வாழ்வின் எஞ்சிய நாள்களை இந்தத் தொகுதி மக்களுக்காகச் செலவிட தயாராக இருக்கிறேன்’’ என்கிறார் உருக்கமாக.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழர் விடுதலைக் கொற்றம் கட்சியின் அ.வியனரசு தலைமையில் தமிழ் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை தொகுதி முழுவதும் விநியோகிக்கின்றனர். முள்ளி வாய்க்கால் படுகொலைக்குக் காரணம், காங்கிரஸ் அரசுதான் என்பதே வியனரசு பிரசாரத்தின் மையமாகவுள்ளது.

‘அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் சொத்துகளை ஏமாற்றிவிட்டார். அதனால் அவருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று ஒரு தகவல் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் களுக்கு வாட்ஸ் அப் மூலம் பரப்புரை செய்யப்படு கிறது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், சென்னையில் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டியிருப்பதாகவும் தகவல் பரப்பப்படுகிறது.

பல்வேறு சமுதாயத் தலைவர்கள் சுயேச்சை களாகக் களமிறக்கியிருப்பதால், அரசியல் கட்சி களின் வாக்குவங்கி சிதறும் வாய்ப்பு அதிக முள்ளது. குறிப்பாக, தொகுதியில் பெரும் பான்மையாக உள்ள நாடார் வாக்குகளைக் குறிவைத்து பனங்காட்டுப்படை வேட்பாளர் ஹரி நாடார் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு சமுதாயத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியிருந்தாலும், இளைஞர்களின் வாக்குகளை அவர் பிரித்துவிடுவார் என அரசியல் கட்சியினர் அஞ்சுகிறார்கள்.

நாங்குநேரியில் நான்கு பக்கமும் தெறி!

அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை பிரசாரத்துக்கு வரவில்லை. பல்வேறு பெயர்களில் உள்ள தங்கள் சமூகத்தினரை ஒன்றிணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. இதனால், தொகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திர குல சமுதாயத் தினர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து, கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்திவருவதால், அவர் என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த இடைத்தேர்தல், வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படு வதால், மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கே பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அவர்களின் பிரசாரத்துக்குப் பிறகே தேர்தல் கள நிலவரத்தின் போக்கில் மாற்றத்தைக் கணிக்க முடியும். ஆளுங்கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருமே பணத்தை வாரி இறைப்பார்கள் என்ற எதிர் பார்ப்பும் தொகுதி முழுவதும் பரவிக்கிடக்கிறது.

பெயரளவுக்கு பொருளாதார மண்டலம்!

திக கிராமங்கள் இருக்கும் நாங்குநேரித் தொகுதியில் வேலைவாய்ப்புக்காகத் தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. இங்கு உள்ள பெரும்பாலான மக்கள் கேரளம், மும்பை, சென்னை, கோவை என தொலைதூரம் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள்.

தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்புத் திட்டம், 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டபோதிலும், நீண்டகாலம் ஆகியும் இன்னும் முடிவடையவில்லை. இதனால், தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. நாங்குநேரி வழியாக 24 ரயில்கள் கடந்து சென்றாலும், இங்கு நிற்பது ஆறு ரயில்கள் மட்டுமே. நாங்குநேரி பேருந்துநிலையத்திலும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.