Published:Updated:

ஒன் பை டூ: ‘துரை வையாபுரிக்குப் பதவி, வாரிசு அரசியல் இல்லை!’ என்ற வைகோவின் கருத்து?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையைத்தான் வைகோ செய்துகொண்டிருக்கிறார். வீட்டில் “நீதான் அரசியல் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்

பிரீமியம் ஸ்டோரி

நாஞ்சில் சம்பத், திராவிட இயக்கப் பேச்சாளர்

“வைகோவின் இந்தக் கருத்து மிகச் சரியானது. காரணம் இது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல். ம.தி.மு.க அதிகாரத்தில் இருக்கிற கட்சி இல்லை. ஆயுள் முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கவேண்டிய ஒரு கட்சி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை அந்தக் கட்சியில் இயங்கி வருபவர்களுக்குக்கூட இருக்காது. வைகோ களைத்தும் இளைத்தும் போயிருக்கிற இந்த நேரத்தில், துரை வையாபுரியின் நியமனம் தேவையான ஒன்று. ம.தி.மு.க தொண்டர்களுடைய சுக, துக்கங்களை விசாரிப்பதற்கும், அவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் தயாரித்துத் தருவதற்கும் தம்பி துரை வைகோ உதவுவார் என்றே நான் கருதுகிறேன். அவர் உத்தரவிடுவதற்காக இந்தப் பொறுப்பை ஏற்கவில்லை; ஊழியம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். பாசிச சக்திகள் பைந்தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தை வீழ்த்தியே ஆக வேண்டும் எனத் திட்டம் வகுத்துக் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் தமிழர்களின் உரிமைக்குப் போராடிய ம.தி.மு.க-வை கூர்மைப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் செய்வதற்கு துரை வைகோ களத்துக்குத் தேவை. அவர் வெற்றிபெறுவார் என நான் நம்புகிறேன்!’’

ஒன் பை டூ: ‘துரை வையாபுரிக்குப் பதவி, வாரிசு அரசியல் இல்லை!’ என்ற வைகோவின் கருத்து?
ஒன் பை டூ: ‘துரை வையாபுரிக்குப் பதவி, வாரிசு அரசியல் இல்லை!’ என்ற வைகோவின் கருத்து?

ப்ரியன், மூத்த பத்திரிகையாளர்

“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையைத்தான் வைகோ செய்துகொண்டிருக்கிறார். வீட்டில் “நீதான் அரசியல் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்” என அவரின் மகனைத் தூண்டிவிட்டு, வெளியில் வந்து, `வாரிசு அரசியல் இல்லை. கட்சி நிர்வாகிகளின் விருப்பம்’ என்று இரட்டை வேடம் போடுகிறார். அதனால்தான், கட்சியின் முக்கிய நிர்வாகிகளே அதிருப்தியில் இருக்கிறார்கள். மகன் அரசியலுக்கு வருவதில் வைகோவுக்கு விருப்பம் இல்லையென்றால், ஏன் குருவிக்குளம் யூனியனில் அவரை அரசியல் வேலை செய்யச் சொல்கிறார்? உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கு எதற்காக அனுமதித்தார்? வைகோ பொடாவில் சிறைக்குச் சென்ற 2002-2004 காலகட்டத்திலேயே துரை வையாபுரி கட்சி விவகாரங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டார். அப்போதே அவரை எதிர்காலத்துக்காகத் தயார்செய்துவிட்டனர். அது அவர்களின் விருப்பம். ஆனால், தற்போது தமிழகத்தில் ம.தி.மு.க-வின் தேவை எங்கே இருக்கிறது? கட்சியின் சொத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு வேண்டுமானால் இந்த நியமனம் உதவலாம். திராவிட இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டியதுதான் ம.தி.மு.க-வின் தற்போது இலக்காக இருக்க வேண்டும். அதற்கு ம.தி.மு.க-வை, தி.மு.க-வில் இணைப்பது மட்டுமே சரியாக இருக்கும். தனியாக இனி அந்தக் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு