Published:Updated:

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போராட்டம்! - கைதான நந்தினியின் சகோதரி நிரஞ்சனா

நந்தினியின் சகோதரி நிரஞ்சனா திடீர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிவரும் நந்தினி சிறையில் உள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ற அவரது சகோதரி நிரஞ்சனாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வேனில் ஏற்றப்படும் நிரஞ்சனா
வேனில் ஏற்றப்படும் நிரஞ்சனா

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உட்பட, பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவருபவர்கள், மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும். இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் 27-ம் தேதி, திடீரெனக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது, மதுரை காவல்துறை. ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்த நிலையில், நந்தினி கைதுசெய்யப்பட்டிருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நந்தினியின் சகோதரி நிரஞ்சனா, டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்களையும் கண்டித்து, மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக, தல்லாகுளம் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

போராட்டம் நடத்திய நிரஞ்சனா
போராட்டம் நடத்திய நிரஞ்சனா

நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், நந்தினியின் சகோதரியும் சட்டக்கல்லூரி 5-ம் ஆண்டு மாணவியுமான நிரஞ்சனா கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நிஞ்சனா சமூக வலைதளங்களின் மூலம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை அவரைக் கைதுசெய்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு