Published:Updated:

100 பெண்களுக்கு 50 கிலோ வெங்காயம்!- இது நாராயணசாமியின் `சோனியாகாந்தி பிறந்தநாள்'

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, 100 பெண்களுக்கு தலா 1/2 கிலோ வெங்காயம் பரிசாக வழங்கினார் முதல்வர் நாராயணசாமி.

வெங்காயம்
வெங்காயம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவரும், பொதுப்பணித்துறையின் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி, சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கேக்கை வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

வெங்காயத்துடன் மகிளா காங்கிரஸ் பெண்கள்
வெங்காயத்துடன் மகிளா காங்கிரஸ் பெண்கள்
அ.குரூஸ்தனம்

அதையடுத்து மகிளா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த100 பெண்களுக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தைப் பரிசாக வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பேற்றிருக்கும் சோனியா காந்தி, கட்சியை வலுவான இயக்கமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். தற்போது நம் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணுக்குச் சென்றிருக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.300 -க்கு விற்கப்படுகிறது. இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஆனால், அதைப்பற்றி மத்திய பா.ஜ.க அரசு கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விளைச்சல் குறைந்த நிலையில்கூட வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்றோம். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், மத்திய அரசு உடனடியாக வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்திருக்கிறோம்” என்றார்