Published:Updated:

``ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர்” - தமிழிசைக்கு நாராயணசாமி காட்டமான பதில்

தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்கும் தமிழிசை

``ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்தான் சாவர்க்கர். அவரை சுதந்திரப் போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.” - நாராயணசாமி

``ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர்” - தமிழிசைக்கு நாராயணசாமி காட்டமான பதில்

``ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்தான் சாவர்க்கர். அவரை சுதந்திரப் போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.” - நாராயணசாமி

Published:Updated:
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்கும் தமிழிசை

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன்கூடிய தியாகச் சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அந்த தியாகச் சுவரில் சுதந்திரப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் பெயர்ப் பலகைகள் பதிக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுவரும் தியாகச் சுவரில், சாவர்க்கர் பெயர் இடம்பெற்ற பலகையைப் பதித்தார் பொறுப்பு ஆளுநர் தமிழிசை. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்துவருகிறது. வருகிற 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் நினைவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. புதுவையில் மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சிக் கவிழ்ப்பு, மதக் கலவரம் ஆகியவற்றை எடுத்துச்சொல்லும்விதமாக அந்தப் பாதயாத்திரை இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் மத்திய மோடி அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

நாராயணசாமி
நாராயணசாமி

மத்திய பா.ஜ.க அரசு இரட்டை ஆட்சி முறையைக் கொண்டுவந்து ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல்படுகிறது எனக் கூறியுள்ளார். அதை நான் முழுமையாக வரவேற்கிறேன். புதுவையில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கினர். அதனால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறேன். மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுச்சேரியில் அமைக்கப்படும் தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயரை வைத்திருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அத்துடன் சாவர்க்கர் இந்தியாவின் தியாகி என்றும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அவரின் பெயரைப் பதிப்பதில் என்ன தவறு என்றும் கேட்டிருக்கிறார். மேலும், தனக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தயார் என்றும் கூறியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. தமிழிசை சுதந்திரப் போராட்டத் தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏதோ தப்பித் தவறி பா.ஜ.க-வில் உறுப்பினராகி, ஆளுநராகியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்தான் சாவர்க்கர். அவரைச் சுதந்திரப் போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து விடுதலையாவதற்காக ஆங்கிலேயர்களுக்கு ஏழு மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். அவற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் காரணமாகத்தான் ஆங்கிலேயர்கள் நிபந்தனையுடன் அவரை விடுவித்தனர். எனவே, அவர் சுதந்திரப் போராட்ட தியாகி அல்ல. சாவர்க்கரின் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும். சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

ரங்கசாமி தலைமையிலான அடிமை ஆட்சி விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது எனத் தெரியும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் தினந்தோறும் கொலைகள் நடக்கின்றன. கொலை நகரமாக புதுவை மாறியிருக்கிறது. புதுவை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. இதேநிலை நீடித்தால் சுற்றுலாப்பயணிகள் வருகை கேள்விக்குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என்றவரிடம், `காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசல் நிலவுகிறதே?’ என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”அது எங்கள் உட்கட்சி விவகாரம். அதை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம்” என்று முடித்துக்கொண்டார்.