Published:Updated:

`குடியரசு தின விழாவில் பாரதியார், நேதாஜி படங்களுக்கு அனுமதி மறுப்பதா?!’ - கொதிக்கும் நாராயணசாமி

நாராயணசாமி

``தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் வரும்போது பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். பாரதியார் கவிதைகளைப் பாடுகிறார்கள், போற்றுகிறார்கள். ஆனால், பாரதியார் படத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கிறார்கள்” - நாராயணசாமி.

`குடியரசு தின விழாவில் பாரதியார், நேதாஜி படங்களுக்கு அனுமதி மறுப்பதா?!’ - கொதிக்கும் நாராயணசாமி

``தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் வரும்போது பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். பாரதியார் கவிதைகளைப் பாடுகிறார்கள், போற்றுகிறார்கள். ஆனால், பாரதியார் படத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கிறார்கள்” - நாராயணசாமி.

Published:Updated:
நாராயணசாமி

கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் நேற்று பேசும்போது, ``மத்திய அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துவருகிறது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மற்றும் நிதியுதவிகளை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கொடுப்பதில்லை. மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பிரதமர் மோடி அதைப் பெருமையாகக் கருதுகிறார். அமித் ஷா அதற்கு உறுதுணையாக உள்ளார். வருகிற 26-ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. டெல்லியில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தியவுடன் கலை நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்புகள் நடைபெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த விழாவில் தமிழக அரசு சார்பில் வ.உ.சிதம்பரம், மகாகவி பாரதியார், வேலு நாச்சியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை அலங்கரித்து அலங்கார ஊர்தியில் செல்வதற்காக வரைபடம் கொடுத்தபோது, மத்திய அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. அதேபோல் நேதாஜி படத்தைக்கொண்ட மேற்கு வங்க ஊர்தி செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதங்களும், அனைத்து சாதிகளும் ஒன்றுதான் என்று கூறிய மகான் நாராயண குருவின் படத்தைக்கொண்ட கேரளா மாநில அலங்கார ஊர்தியையும் ஏற்கவில்லை. கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. இது பிரதமர் மோடியின் காழ்ப்புணர்ச்சியையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது எந்த அளவுக்கு அவர் அக்கறையின்றி இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. கூட்டணிக் கட்சி ஆளுகின்ற புதுச்சேரிக்கு அனுமதி கொடுத்தார்களா என்று இதுவரை தெரியவில்லை.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

பா.ஜ.க ஒரு சர்வதிகாரக் கட்சி. பிரதமர் ஒரு சர்வதிகாரி. அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. பேசும்போது மட்டும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பார். ஆனால், செயல்பாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது, முதல்வர்களை மதிக்காமல் இருப்பது மோடிக்கு கைவந்த கலை. ஒரு பிரதமர் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும். உடனடியாக பிரதமர் மோடி சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் படங்களை தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். பா.ஜ.க-வின் இரட்டை வேடம் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் வரும்போது பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். பாரதியார் கவிதைகளைப் பாடுகிறார்கள், போற்றுகிறார்கள். ஆனால், பாரதியார் படத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது பா.ஜ.கவின் வேஷத்தைக் காட்டுகிறது. இப்போதாவது பிரதமர் மனம் திருந்தி இந்த நாடு அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்த நாடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் மத்திய அரசு செயல்படும் என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமென்றால் இந்த ஊர்திகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவும் நிலை இருப்பதால் புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினேன். அதை உதாசீனப்படுத்தினார்கள். அதனால் தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்துவந்த சுற்றுலாப்பயணிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்போது புதுச்சேரி மாநிலம் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் மாநிலமாக திகழ்வதென்பது நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம். புதுவையில் கொரோனா தொற்று அதிகமாகி மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு ஆளுநரும் முதல்வரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தேன். இதற்கு அவர்கள் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்களா... என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

குடியரசு தின அணிவகுப்பு  (கோப்புப் படம்)
குடியரசு தின அணிவகுப்பு (கோப்புப் படம்)

அதுமட்டுமல்லாமல் எந்ததெந்தக் காரணிகளில் புதுச்சேரி முதலிடத்தில் இருக்கக் கூடாதோ, அவற்றிலெல்லாம் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. கட்சி மாறிகள், கொலைகள், குண்டுவெடிப்பு, நில அபகரிப்பு போன்றவற்றில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது கொரோனா தொற்றிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் கல்வி, விவசாயம், மருத்துவம், சுற்றுலா, சட்டம்-ஒழுங்கில் முதலிடத்தைப் பிடித்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடம் பிடிப்பது என்பது மாநிலத்துக்கு மிகப்பெரிய இழுக்கு. மாநில நிர்வாகம் எவ்வளவு சீர்கெட்டுப்போயிருக்கிறது என்பதற்கு இது உதாரணம். தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

புதுவையில் பள்ளி மூடல் சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தடுப்பூசி போடுவதற்காகப் பள்ளிகளை திறப்பதாகக் கூறுகிறார்கள். பிள்ளைகளின் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடுவதில் என்ன பிரச்னை இருக்கிறது... மக்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா... முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா... மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாரா? இது போன்ற ஓர் அவலமான ஆட்சி புதுவையில் நடந்துவருகிறது. மற்ற மாநிலங்கள் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கின்றன.

முதல்வர் ரங்கசாமி தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, பொங்கல் பண்டிகைக்கு அறிவித்த அரிசி, வெல்லம் உள்ளிட்ட 11 பொருள்களை கண்டிப்பாக அடுத்த தீபாவளி, பொங்கலுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன். தயவுசெய்து நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டாம். முதல்வர் எந்த நிவாரணத்தை அறிவித்தாலும் அதற்கான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் மத்தியில் முதல்வருக்கு கெட்ட பெயர் வரும். நிதிப் பற்றாக்குறை ஏற்படும், ஆடம்பரச் செலவை தவிர்க்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism