Published:Updated:

திரௌபதி முர்முவுடன் மேடையில் எடப்பாடி... காத்திருந்து ஆதரவை தெரிவித்த பன்னீர்! - நடந்தது என்ன?

திரெளபதி முர்மு

`ஸ்டாலின், பழங்குடியினரான திரெளபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார்' என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

திரௌபதி முர்முவுடன் மேடையில் எடப்பாடி... காத்திருந்து ஆதரவை தெரிவித்த பன்னீர்! - நடந்தது என்ன?

`ஸ்டாலின், பழங்குடியினரான திரெளபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார்' என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில், யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்து, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு திரட்ட இன்று சென்னை வந்தார்.

அதிமுக
அதிமுக

இந்த நிலையில், அதிமுக-வில் இரட்டைத் தலைமைகளுக்கு இடையிலான யுத்தம் வெளிப்படையாக வெடித்து, அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதிமுகவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிரியும் அபாயமும் இருக்கிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் முர்மு ஆதரவு கேட்கும் நிக்ழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக-வின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் விடுதியில் தனித்தனி அறையில் இருந்தனர். அ.தி.மு.க, பா.ம.க, புதிய தமிழகம், தே.மு.தி.க, த.ம.கா, புதிய நீதி கட்சி ஆகிய கட்சியின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கினறனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக
அதிமுக

அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, செம்மலை, தமிழ்மகன் உசேன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு, தம்பிதுரை, வளர்மதி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஓ.பி.எஸ் தரப்பில் தர்மர் பங்கேற்றார்.

மேலும் நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, வானதி உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

திரௌபதி முர்முவுடன் மேடையில் எடப்பாடி... காத்திருந்து ஆதரவை தெரிவித்த பன்னீர்! - நடந்தது என்ன?

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `` ஸ்டாலின் பழங்குடியினரான திரெளபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார். அதிமுகவின் முழுமையாக ஆதரவுடன் திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம்'' என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இதைத்தொடர்ந்து பேசிய பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு,``'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மேலும் திருவள்ளுவர், பாரதியார் மேற்கோள் காட்டிய முர்மு சி.ராஜகோபாலாச்சாரி, காமராஜ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அப்துல்கலாம் போன்ற தலைவர்களை நினைவுகூர்ந்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு முன்னரே வந்தாலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை வரவில்லை. எடப்பாடி தரப்பு ஆதரவு தெரிவித்துச் சென்ற பிறகு, காத்திருந்த பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முர்முவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் பேசிய பன்னீர்செல்வம், ``அதிமுக ஒருங்கிணைப்பாளராக திரெளபதி முர்முவுக்கு ஆதரவை தெரிவித்தோம். கழக சட்ட விதிப்படி இன்று வரை நான் தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்” என்றார்.