Published:Updated:

`தேசிய சின்னம் ஒரு மதத்துக்கானதல்ல; உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள்’ -பிரதமருக்கு இடதுசாரிகள் கோரிக்கை

தேசிய சின்னம் திறப்புவிழாவின்போது... ( ட்விட்டர் )

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் தேசிய சின்னம் திறப்புவிழா ஒரு மதச்சடங்காக நடத்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளனர்.

`தேசிய சின்னம் ஒரு மதத்துக்கானதல்ல; உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள்’ -பிரதமருக்கு இடதுசாரிகள் கோரிக்கை

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் தேசிய சின்னம் திறப்புவிழா ஒரு மதச்சடங்காக நடத்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளனர்.

Published:Updated:
தேசிய சின்னம் திறப்புவிழாவின்போது... ( ட்விட்டர் )

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய முகப்பின் உச்சியின் மேற்கூரையில் 9,500 கிலோ எடையுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் நடந்த மதச் சடங்குகளிலும் பிரதமர் கலந்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிக் கட்சியான சி.பி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், ``தேசிய சின்னம் நிறுவுதலை மத விழாக்களைப்போல நடத்தக் கூடாது. இது ஒரு மத நம்பிக்கைகள் உள்ளவர்களுக்கான சின்னம் மட்டுமல்ல... அனைவருக்குமான சின்னம். குறிப்பிட்ட மதத்தை தேசிய விழாக்களில் முன்னிறுத்துவதைத் தவிருங்கள்" என்று பதிவிட்டிருக்கிறது.

தேசிய சின்னம் திறப்பு விழாவின்போது மோடி
தேசிய சின்னம் திறப்பு விழாவின்போது மோடி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து இது குறித்து இடதுசாரிக் கட்சிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசியலமைப்பு நமது ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளாக நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள், நீதித்துறை என நிர்வாகத்தைத் தெளிவாகப் பிரிக்கிறது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் பிரதமர் தேசிய சின்னத்தைத் திறந்துவைப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். இந்திய நிர்வாகத்தின் தலைவரான பிரதமரால் இந்த அரசியலமைப்பு மூன்று பிரிவுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு சிதைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்த விழாவில் பிரதமர் பூஜை செய்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களுக்கும் தங்கள் நம்பிக்கையைக் கடைப்பிடிக்கவும், வெளிப்படுத்தவும், உரிமை மற்றும் அதற்கான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த உரிமை பிரிக்கவோ, மறுக்கவோ முடியாத உரிமை. அதேநேரத்தில், அனைத்து மத மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு எந்த நம்பிக்கையையும் அல்லது மதத்தையும் கடைப்பிடிக்கவோ அல்லது பின்பற்றவோ கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொலிட் பீரோ, அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும், பிரதமர் பதவியேற்றபோது எடுத்த உறுதிமொழியை நேர்மையாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.