Published:Updated:

``மக்களின் குரலே கடவுளின் குரல்... ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்" - நவ்ஜோத் சிங் சித்து ட்வீட்

நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 80-க்கும் மேற்பட்ட தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

``மக்களின் குரலே கடவுளின் குரல்... ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்" - நவ்ஜோத் சிங் சித்து ட்வீட்

பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 80-க்கும் மேற்பட்ட தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

Published:Updated:
நவ்ஜோத் சிங் சித்து

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான, வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிர நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் மதியத்திற்குள்ளாகவே எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த கட்சி ஆட்சியமைக்கப்போகின்றன என்பது தெரியவந்துவிடும். தற்போதைய நிலவரப்படி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழலுக்கு முன்னேறியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 80-க்கும் மேற்பட்ட தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்-  பக்வந் மான்
அரவிந்த் கெஜ்ரிவால்- பக்வந் மான்

இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டரில், ``மக்களின் குரலே கடவுளின் குரல். பஞ்சாப் மக்களின் தீர்ப்பை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மக்களின் புரட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

காங்கிரஸிலிருந்து விலகி புதியக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்த, பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் தோல்வியடைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism