Published:Updated:

அனுமன் ஜயந்தி கலவர விவகாரம்: இடைக்காலத் தடையை மீறி இடிக்கப்படும் கட்டடங்கள் - என்ன நடக்கிறது?

டெல்லி கலவரம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அனுமன் ஜயந்தி கலவர விவகாரம்: இடைக்காலத் தடையை மீறி இடிக்கப்படும் கட்டடங்கள் - என்ன நடக்கிறது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
டெல்லி கலவரம்

டெல்லியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை ஜஹாங்கிர்புரியில் பேரணி சென்ற இந்து அமைப்பினருக்கும், அந்தப் பகுதியில் அதிகம் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கலவரம் தீவிரமடைந்ததையடுத்து, போலீஸார் இருதரப்பினர் இடையேயான மோதலை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது கலவரக்காரர்கள் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, அந்தப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக வன்முறையை தூண்டிவிட்டதாக 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் தடை
ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் தடை

இந்த கலவரத்தின் எதிரொலியாக ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்குமாறு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மாநகராட்சியின் உத்தரவுக்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. டெல்லி மாநகராட்சியின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா
ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா

இந்தச் சம்பவம் தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சாதா, ``15 வருடங்களுக்காக பா.ஜ.க ஆட்சி செய்த நகராட்சிகளில் முறைகேடாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதியளித்திருக்கின்றனர். இன்று அவற்றை இடிக்கச் சொல்லும்போது, அவர்களின் வீடுகளையும்தான் இடிக்கவேண்டும். உள்துறை அமைச்சர்தான் இதுபோன்ற கலவரத்துக்கு திட்டமிடுகிறார். புல்டோசரை நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால், முதலில் உள்துறை அமைச்சரின் வீட்டை இடிக்க அதனை பயன்படுத்துங்கள், கலவரம் தானாக நின்றுவிடும்" என்று ஆவேசமாகக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism