Published:Updated:

நீராவி முருகன் Encounter: `துணிச்சலுக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பேர்போனவர்' - யார் இந்த இசக்கிராஜா?

நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த இசக்கி ராஜா

`நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா இளம் வயது முதலாகவே எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் செயல்படக் கூடியவர். காவல்துறையிலும் அவர் அதே துடிப்புடன் இருக்கிறார்' என்கிறார்கள்.

நீராவி முருகன் Encounter: `துணிச்சலுக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பேர்போனவர்' - யார் இந்த இசக்கிராஜா?

`நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா இளம் வயது முதலாகவே எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் செயல்படக் கூடியவர். காவல்துறையிலும் அவர் அதே துடிப்புடன் இருக்கிறார்' என்கிறார்கள்.

Published:Updated:
நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த இசக்கி ராஜா

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்த நீராவி முருகன், மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட 80-க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்புடையவர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மருத்துவர் ஒருவரது வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

நீராவி முருகன்
நீராவி முருகன்

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பதுங்கியிருந்த நீராவி முருகனை கைது செய்ய முயன்றபோது அவர் அரிவாளால் போலீஸாரை வெட்டியுள்ளார். அதில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எஸ்.ஐ இசக்கிராஜா பின்னணி என்ன?

நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த எஸ்.ஐ இசக்கிராஜா, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பெற்றோர் தற்போது நெல்லையில் வசித்து வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டியுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா

கல்லூரியில் படிக்கும்போது கிக் பாக்ஸிங், சிலம்பம், வாள் வீச்சு போன்றவற்றில் திறமையாகச் செயல்பட்டு பரிசுகளை வென்றிருக்கிறார். காவல்துறையில் சேர்ந்த பிறகும் கூட கிக் பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச போட்டியில் காவல்துறை சார்பாகப் பங்கேற்று பரிசு வென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இசக்கிராஜா பெற்றோர் நெல்லையில் வசிப்பதால் விடுமுறைக்கு வரும்போது அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவார் என்கிறார்கள், அவர் நண்பர்கள். சிறு வயதிலேயே அவருக்கு சாதனை படைக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததாத் தெரிவிக்கும் நண்பர்கள், காவல்துறைக்குச் சென்றதும் அந்த ஆசையைத் தீர்க்கும் வகையில், இசக்கிராஜா துணிச்சலாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்கள்.

காவல்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பது இசக்கிராஜாவின் விருப்பம்.
நண்பர்கள்

தொடர்ந்து பேசிய நண்பர்கள், ``சிங்கம் திரைப்படத்தில் வரும் சூர்யா போல காவல்துறையில் செயல்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அதனால் அவர் பணியில் இருக்கும் இடங்களில் எல்லாம் துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவருக்கு எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை.

பந்தாடப்படக் காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் பணியாற்றியபோது அந்தப் பகுதியில் இருந்த ரௌடிகள் அனைவரும் இடத்தை மாற்றிக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு செயல்பட்டார். அதனால் அவரை அந்தப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

இசக்கிராஜா
இசக்கிராஜா

அதன் பிறகு, கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு மாறுதலானதும் அங்கும் அதிரடியாகச் செயல்பட்டார். பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளைக் கேலி, கிண்டல் செய்தவர்களை விரட்டியடித்தார். அதனால் பெண்கள் நிம்மதியடைந்தார்கள்.

கோவில்பட்டியில் பணியாற்றியபோது ஒரு ரௌடியை காலில் சுட்டு விட்டார். அது சர்ச்சையானது. பின்னர், பேருந்து நிலையத்தின் உள்ளே பஸ் டிரைவர் ஒருவர் புகைபிடித்துக் கொண்டிருந்தார். அவரை கண்டிப்பதற்குப் பதிலாக இசக்கிராஜா அடித்து விட்டார். அதனால் போக்குவரத்துத் துறையினர் போராட்டம் நடத்தியதால் அங்கிருந்து தூக்கிய்டிக்கப்பட்ட அவர் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் போஸ்டர்களை ஒட்டினார்கள்.

சுத்தமல்லி சரகத்திலும் அவர் அதிரடியாகச் செயல்பட்டார். நெல்லையின் புறநகர்ப் பகுதியான சுத்தமல்லி பகுதியில் ரௌடி கும்பல் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்து கைது செய்தார். அங்குள்ள ஒரு ஹோட்டல் குறிப்பிட்ட நேரத்தில் அடைக்காததால் அதன் ஊழியரை கன்னத்தில் அறைந்து விட்டார். அந்த சிசிடிவி காட்சி வைரலானது. அந்த சம்பவத்தைக் கண்டித்து வர்த்தக அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுத்தமல்லி ஸ்டேஷனில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்டேஷனுக்கு தூக்கியடிக்கப்பட்டார்” என்று அவர் நண்பர்கள் தெரிவிக்கிறார்க்ள்.

சண்டியர் வாட்ஸ் அப் குழு

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா பற்றி கோவில்பட்டி நகரத்தைச் சேர்ந்த மக்களிடம் பேசியபோது, ``எங்க ஊருக்கு அவர் வந்ததும் ரௌடிஸம் எல்லாத்தையும் ஒழிச்சுக் கட்டிட்டார். இங்கே சிலர் கூலிப்படையாகச் செயல்பட்டு வந்தாங்க. குற்றவாளிகள் எல்லோரும் வாட்ஸ் அப் மூலம் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா

சண்டியர் என்ற பெயரில் குற்றவாளிகள் வைத்திருந்த வாட்ஸ் அப் குழு குறித்து இசக்கிராஜாவுக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக ஒரு குற்றவாளியை கைது செய்ததும், அவர் செல்போனை வாங்கிய இசக்கிராஜா, அந்த குழுவில் கூலிப்படையினருக்கு சவால் விடும் வகையில் பேசினார். `என் லிமிட்டுக்குள் எவனாவது தப்புச் செஞ்சா விளைவு பயங்கரமா இருக்கும்’னு அவர் மிரட்டிய ஆடியோ வைரலானது.

அந்த வீடியோவில் குற்றவாளிகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அந்த நபர்கள் நகரத்தை விட்டு வெளியேறிச் சென்றார்கள். குற்றம் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கையுடன் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா செயல்படுவார்” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism