Published:Updated:

நீட்: ``ஆளுநர் கருத்துகள் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை அவமதிப்பதாக உள்ளன!" - மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் சட்டத் திருத்த மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.

நீட்: ``ஆளுநர் கருத்துகள் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை அவமதிப்பதாக உள்ளன!" - மா.சுப்பிரமணியன்

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் சட்டத் திருத்த மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் சட்டத் திருத்த மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``நீட் தேர்வை அறிமுக காலத்திலிருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்துவருகிறது. நீட் சட்டத் திருத்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் தன்னிச்சையாக முடிவு செய்து மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. நீட் விலக்கு மசோதா தொடர்பான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை.

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே வெற்றிபெறும் வகையில் நீட்தேர்வு உள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கனவு எட்டாக்கனியாக உள்ளது. நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை பாதித்திருக்கிறது. பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே வெற்றிபெறும் வகையில் நீட்தேர்வு உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையாகக் கருத்துகளைக் கூறியது சரி இல்லை. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மசோதா கொண்டுவரப்பட்டது என ஆளுநர் கூறியிருப்பது தவறானது. ஆளுநர் கருத்துகள் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை அவமதிப்பதாக உள்ளன. ஆளுநரின் கருத்துகள் உயர்மட்டக்குழுவின் அறிக்கையை அவமானப்படுத்துவதுபோல அமைந்துள்ளன. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், ஆளுநர் குறை கூறுவது சரியில்லை.

தமிழக அரசு
தமிழக அரசு

பல முறை தேர்வு எழுதுவோருக்கு நீட் தேர்வு சாதகமாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூறி சட்டமே இயற்றக் கூடாது என ஆளுநர் கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று தெரிவித்தார்.