Published:Updated:

நீட் இரண்டாம் கட்ட விண்ணப்பம்... பதிவும், மதிப்பெண் கணக்கீடும்!

நீட் நுழைவுத் தேர்வு 2021-ன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, ஃபேஸ் 2 எனப்படும் நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்துக்கான பதிவு நடைபெறவிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மருத்துவப் படிப்புகளின் 2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதினர். இதைத் தொடர்ந்து விடைக்குறிப்பும் (ஆன்ஸர் கீ), தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட்
நீட்

நீட் நுழைவுத் தேர்வு 2021-ன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, ஃபேஸ் 2 எனப்படும் நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்துக்கான பதிவு நடைபெறவிருக்கிறது.

நீட் இரண்டாம் கட்ட பதிவு என்றால் என்ன?

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தேசியத் தேர்வு முகமையால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தின் முதல் பகுதி, நீட் தேர்வு 2021-க்கு முன்பாகத் தேர்வாளர்களால் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்; நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தின் இரண்டாம் பகுதியோ நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
நீட் தேர்வு முடிவு
நீட் தேர்வு முடிவு

நீட் இரண்டாம் கட்டத்தின் பதிவுக்கான தேதியைத் தேசியத் தேர்வு முகமை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை: `நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்!'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் இரண்டாம் கட்ட விண்ணப்பத்தில் தேர்வாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டியவை:

⦁ சொந்தத் தகவல்கள்

⦁ கல்வித் தகவல்கள்

⦁ இருப்பிடத் தகவல்

⦁ பெற்றோரின் வருமானம்

⦁ சாதிச் சான்றிதழ், 40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், பத்தாம் வகுப்புச் சான்றிதழ், குடிமைச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவணங்கள்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் இளநிலை 2021 - டை-பிரேக்கர்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால், மாணவர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டு ரேங்க் மதிப்பிடும் இதற்கு முன்பிருந்த வழிமுறைக்குப் பதிலாக இந்த ஆண்டு புதிய டை-பிரேக்கர் வழிமுறையை தேசியத் தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி,

⦁ உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைத் தொடர்ந்து

⦁ வேதியியலில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைத் தொடர்ந்து

⦁ அனைத்து பாடங்களிலும் கேள்விகளை எதிர்கொண்ட எண்ணிக்கை, சரி மற்றும் தவறான பதில்களின் குறைவான அளவீடுகளைக் கொண்ட மாணவர்

என்ற வரிசையில் புதிய டை-பிரேக்கர் வழிமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

நீட் 2021: கட்-ஆஃப்

நீட் கட்-ஆஃப் என்பது ஒரு மருத்துவ இடத்துக்குப் போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை, இருக்கக்கூடிய நீட் இடங்கள், நீட் தேர்வின் கடின அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப், தேர்வு முடிவுகளின்போது வெளியிடப்படும்.

நீட் தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள்

நீட் தேர்வு முடிவுகள் 2021: மொத்த இடங்கள்

மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் உள்ள சுமார் 85 ஆயிரம் இடங்களுக்காக நீட் தேர்வு 2021 நடைபெற்றது. இவற்றில் 80,055 எம்.பி.பி.எஸ் மற்றும் 26,949 பி.டி.எஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கான இடங்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. நீட் முடிவுகள் 2021-ஐ அடிப்படையாகக் கொண்டு, 1,205 எம்.பி.பி.எஸ் இடங்கள் 15 எய்ம்ஸில் வழங்கப்படும்; 200 ஜிப்மர், 52,720 ஆயுஷ், 525 கால்நடை மருத்துவம் ஆகிய இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீட் தற்கொலைகளை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

நீட் 2021: தகுதி அளவுகோல்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற பொது பிரிவில் உள்ள மாணவர்கள் 50 சதவிகிதமும்; பட்டியல், பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 40 சதவிகிதமும்; 40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவிகிதமும் பெற வேண்டும் என்பது மதிப்பெண் அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

நீட் 2021: மதிப்பீட்டு முறை

நீட் இளநிலை 2021 தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களைக் கொண்டது. விரைவில் வெளியாகவிருக்கும் நீட் தேர்வு 2021-ன் விடைக்குறிப்பின் உதவியோடு நீட் தேர்வில் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மாணவர்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். சரியான விடை ஒவ்வொன்றுக்கும் நான்கு மதிப்பெண்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தவறான விடை ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிலளிக்காக கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. இந்த அடிப்படையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைத் தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு