Published:Updated:

நேரு இந்தியா: விமர்சித்த மோடி; புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர்! - என்ன நடந்தது?!

நேரு இந்தியா: விமர்சித்த மோடி; புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர்!

`நேருவின் இந்தியாவில் இன்று பாதிக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றம் போன்ற கிரிமினல் புகார்கள் இருக்கின்றன. இதே பாதையில் சிங்கப்பூரைப் பயணிக்கவிடாமல் தடுக்க வேண்டும்.' - சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்.

நேரு இந்தியா: விமர்சித்த மோடி; புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர்! - என்ன நடந்தது?!

`நேருவின் இந்தியாவில் இன்று பாதிக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றம் போன்ற கிரிமினல் புகார்கள் இருக்கின்றன. இதே பாதையில் சிங்கப்பூரைப் பயணிக்கவிடாமல் தடுக்க வேண்டும்.' - சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்.

Published:Updated:
நேரு இந்தியா: விமர்சித்த மோடி; புகழ்ந்த சிங்கப்பூர் பிரதமர்!

`நேருவின் இந்தியாவில் இன்று பாதிக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றம் போன்ற கிரிமினல் புகார்கள் இருக்கின்றன. இதே பாதையில் சிங்கப்பூரைப் பயணிக்கவிடாமல் தடுக்க வேண்டும்' என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பேசியிருப்பது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் லீ சியென் பேசிய வீடியோவைப் பகிர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்துவருகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, சிங்கப்பூர் தூதுவரை அழைத்துக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் பிரதமர்!
சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூர் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு:

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங், `ஜனநாயகம் எப்படிச் செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில் நீண்டநேரம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், `` பொதுவாக ஒரு நாட்டை உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் முயல்கின்றனர். ஆனால், அந்த ஆரம்ப உத்வேகத்தை, அடுத்தடுத்த தலைமுறைகள் தக்கவைத்துக்கொள்வதில்லை. காலப்போக்கில், அரசியலின் தன்மை மாறுகிறது. இப்போதுள்ள பல அரசியலமைப்புகள் அதைத் தோற்றுவித்தவர்களின் கொள்கைக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றன. இப்போதுள்ள அரசியல்வாதிகள் அடையாளம் இழந்து நிற்கின்றனர். இவர்கள்மீதான மரியாதை குறைந்துவருகிறது. இதனால் நாடுகள் சீரழிந்து அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன" என வேதனை தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசிய லீ சியென் லூங், ``விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள், துணிச்சலும் தனித்துவமும்கொண்ட, தலைசிறந்த தலைவர்களாக வெளிப்பட்டனர். அவர்களின் பண்பாடும், தன்னிகரற்ற திறமையும் அந்தந்த நாடுகளை வளர்த்தெடுத்தன. தங்கள் முன்பிருந்த சோதனைகளை ஒரு நெருப்பைப்போல் கடந்து, மக்கள் கொண்டாடும் தேசத் தலைவர்களாக உருப்பெற்றனர். அவர்களில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, இஸ்ரேலின் டேவிட் பென்-குரியன்ஸ், நமது சிங்கப்பூரின் தலைவர் லீ குவான் போன்றவர்களைக் கூறலாம்.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு

இந்தத் தலைவர்கள் அனைவரும் மக்களின் எதிர்பார்ப்புகளை நன்கறிந்து அதற்கேற்றாற்போலச் செயல்பட்டு, மக்கள் மத்தியில் உயர்ந்து நின்று, தங்கள் செல்வாக்கால் புதிய உலகத்தைக் கட்டமைத்தனர். மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தந்தனர். ஆனால், இன்று அவர்களின் செயல்பாட்டுக்கும் கனவுக்கும் நேர் மாறாக, அந்தத் தலைவர்களுக்குப் பின்னால் வந்திருக்கும் இப்போதைய தலைவர்கள் இருக்கிறார்கள். இப்போது அந்த நாடுகள் மிகவும் மோசமான நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

குறிப்பாக, நேருவின் இந்தியாவில் இன்று பாதிக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றப் புகார்கள், வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டு ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், நம் நாட்டின் வருங்காலத் தலைமுறைகள் அது போன்ற பாதைகளில் சிங்கப்பூரைப் பயணிக்கவிடாமல் தடுக்க வேண்டும். அனைத்து விதிகளையும் முறையாகக் கடைப்பிடித்து, அனைவரும் சமம், யாரும் சட்டத்துக்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்! சிங்கப்பூர் மரபுரிமையாகப் பெற்ற அமைப்பைப் பாதுகாத்து, நமது ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்!" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் எழுந்த சர்ச்சை:

ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அந்தந்த மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவந்த பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி கோவா தேர்தல் பிரசாரத்தின்போது, ``போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின்கீழ் இருந்த கோவா பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க சில மணி நேரங்களே ஆகியிருக்கும். ஆனால், அதைச் சாதிக்க நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது" என முன்னாள் காங்கிரஸ் பிரதமர் நேருவை விமர்சித்துப் பேசினார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து நேருவின் ஆட்சிக்காலத்தையே குற்றம்சாட்டிவந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ``ஒருபுறம் மக்கள் பணவீக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர். மற்றொருபுறம் ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஓர் அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதை விடுத்து, எல்லாப் பிரச்னைகளுக்கும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் காரணம் கூறுகிறது. இன்னும் எத்தனை காலம்தான் நேரு மீதே பழி சொல்வீர்கள்?” என்று பிரதமர் மோடியைக் காட்டமாக விமர்சித்தார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் அல்லாத, இந்திய நாட்டைச் சாராத ஒரு வெளிநாட்டுத் தலைவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நேரு இந்தியா என நேருவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியும், தற்போதைய இந்திய ஆட்சியாளர்களை விமர்சிப்பது போன்றும் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூர் பிரதமர் பேசும் வீடியோவைப் பகிர்ந்து, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், `நேருவைப் பற்றி சிங்கப்பூர் பிரதமருக்குத் தெரிந்ததுகூட, இந்தியப் பிரதமருக்கு தெரியவில்லை; அவர் பாராட்டுகிறார், இவர் வெறுப்பை உமிழ்கிறார்' என்றெல்லாம் பதிவிட்டு, பிரதமர் மோடியை விமர்சித்துவருகின்றனர்.

சிங்கப்பூர் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி
சிங்கப்பூர் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி

சிங்கப்பூருக்கு மத்திய அரசு கண்டனம்:

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமரின் பேச்சுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது குறித்து விளக்கம் கேட்டு இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்குக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். மேலும், `சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தேவையற்றது' எனவும் கூறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism