Published:Updated:

`நல்லதே நடந்திருக்கு, நன்றி வணக்கம்!'-துணைத் தலைவர் ராஜினாமா குறித்து நெல்லிக்குப்பம் ராதாகிருஷ்ணன்

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட தி.மு.க-வின் போட்டி வேட்பாளர் ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

`நல்லதே நடந்திருக்கு, நன்றி வணக்கம்!'-துணைத் தலைவர் ராஜினாமா குறித்து நெல்லிக்குப்பம் ராதாகிருஷ்ணன்

நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட தி.மு.க-வின் போட்டி வேட்பாளர் ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Published:Updated:
நெல்லிக்குப்பம்

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிரிஜா திருமாறன் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால், அவருக்கு எதிராக தி.மு.க சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் களமிறங்கி 26 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட கிரிஜா திருமாறன் மூன்று ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அதையடுத்து நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மதியம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

திருமாவளவன்
திருமாவளவன்

தலைவர் பதவியில் நின்று தோல்வியடைந்த கிரிஜா திருமாறன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால், அந்தப் பதவிக்கும் தி.மு.க நகரச் செயலாளரான மணிவண்ணன், 3-வது வார்டில் வெற்றிபெற்ற தன் மனைவி ஜெயபிரபாவை நிறுத்தினார். 29 கவுன்சிலர்கள் பங்கேற்ற அந்த மறைமுகத் தேர்தலில் 22 வாக்குகளைப் பெற்று ஜெயபிரபா மணிவண்ணன் வெற்றிபெற, வெறும் ஆறு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறன். ஜெயபிரபா நகராட்சித் துணைத் தலைவராக வெற்றிபெற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தி.மு.க – வி.சி.க கூட்டணியில் உரசலை ஏற்படுத்தியதால், ``கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு என்னை வந்து சந்தியுங்கள்” என்று அறிக்கை வெளியிட்டார் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். ஆனால், ``தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் நாங்கள் வெற்றிபெறவில்லை. பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம்” என்று ஜூ.வி-யிடம் தெரிவித்திருந்தார் ராதாகிருஷ்ணன்.

சந்திப்பு
சந்திப்பு

இந்த நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சித் துணைத் தலைவரான ஜெயபிரபா அமைச்சர் சி.வி.கணேசனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நெல்லிக்குப்பம் நகர்மன்றத் துணைத் தலைவராக தேர்வுபெற்ற ஜெயப்பிரியா அவர்கள் தமிழக முதல்வரின் ஆணையை ஏற்று பதவி விலகினார். அதனையொட்டி அவரும் தலைவராகத் தேர்வான ஜெயந்தி அவர்களும் அமைச்சர் கணேசன் அவர்களை சந்தித்தனர். அப்போது நானும் உடன் இருந்தேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

துணைத் தலைவரின் ராஜினாமா குறித்து நகராட்சித் தலைவர் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``நல்லதே நடந்திருக்கிறது" என்றார். தொடர்ந்து, ``துணைத் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். உங்கள் மனைவி ராஜினாமா செய்வாரா?" என்று கேட்டதற்கு, ``நன்றி வணக்கம்" என்று முடித்துக்கொண்டார்.