Published:Updated:

`ஆந்திராவின் `நீரோ' ஜெகன் வீடியோ கேம் விளையாடுவதில் பிஸி!' - கொதிக்கும் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

`ஆந்திர மாநிலத்தின் நீரோவான ஜெகன் மோகன் ரெட்டி தனது அரண்மனையில் வீடியோ கேம் விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறார்' என சந்திரபாபு நாயுடு விமர்சித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நாளிலிருந்தே அவரது அரசியல் அதிரடிகள் தொடங்கிவிட்டது. அரசியலில் பழிவாங்கும் படலங்கள் சகஜம்தான். ஆனால், ஜெகனின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே அதிரடியாக இருந்தது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. அரசு கட்டடங்கள் போன்றவை அமராவதியில் கட்டமைக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடு, தன் குடும்பத்துடன் அமராவதிக்கு குடிபெயர்ந்தார். அவரது வீட்டின் அருகே பிரஜா வேதிகா என்ற கட்டடத்தைக் கட்டினார். அதிகாரிகள், அமைச்சர்களுடனான சந்திப்புகள் இங்குதான் நடத்தப்பட்டன.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறின. சந்திரபாபு கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் மாற்றினார் ஜெகன். அரசுக் கட்டடமான பிரஜா வேதிகா இடித்துத் தள்ளப்பட்டது. `கிருஷ்ணா நதிக்கரையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது' எனக் காரணமும் கூறினார் ஜெகன். இதோடு விட்டுவிடவில்லை கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து 100 மீட்டருக்குக் குறைவான தூரத்தில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு உள்ளிட்ட 28 கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்கள் அனைத்தும் இடிக்க வேண்டும் என ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு தன் சொந்த மாவட்டத்துக்கே திரும்பிவிட்டார்.

என்னதான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினாலும் மக்களிடம் ஜெகனின் இமேஜ் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் மனதை வென்றதாக ஆந்திர ஊடகங்கள் புகழ்ந்தன. இந்நிலையில்தான் ஜெகன் வீடு கட்டுவது தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மாநிலமே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது குண்டூரில் ஜெகன் கட்டும் வீட்டுக்காக அரசு நிதியை ஒதுக்கியுள்ளார் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒய்.எஸ்.ஆர் ஜெகன், தான் கட்டிவரும் வீட்டுக்கு ஜன்னல், கதவுகளை அமைக்க, ரூ.73 லட்சம் அரசு நிதியை ஒதுக்கியுள்ளார். மாநில மக்களின் பணத்தை ஜெகன் தாராளமாகச் செலவு செய்கிறார். கடந்த 5 மாதங்களாக ஆந்திர அரசு நிர்வாகம் தவறாக வழிநடத்தப்பட்டு நிதிப்பிரச்னையில் சிக்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தானாம் மன்னன் நீரோ. ஆந்திர மாநிலம் கடந்த 5 மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. கட்டட தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தின் நீரோவான ஜெகன் மோகன் ரெட்டி, தனது அரண்மனையில் வீடியோ கேம் விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஜெகன் பதவியேற்ற உடனே அவரது இல்லம் அமைத்துள்ள ததேபள்ளியின் சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்கான அரசு உத்தரவு வெளியானது. அடுத்த நாளே பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான அடுத்த உத்தவரவு வந்தது. ஹெலிபேட் கட்டுமானம், ஜன்னல் பொருத்துதல், பொதுமக்கள் சந்திப்புக்கான கட்டடம் என அரசு நிதியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு