Published:Updated:

``நேதாஜி ஓர் இடதுசாரி; இன்று அவர் உயிரோடிருந்திருந்தால்..!" - பாஜக குறித்து நேதாஜி மகள்

நேதாஜி, அனிதா போஸ்-பாஃப்

``ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதிலிருந்து, அவர்களின் சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என்பதை ஒப்புக்கொள்வேன்." - நேதாஜி மகள்

``நேதாஜி ஓர் இடதுசாரி; இன்று அவர் உயிரோடிருந்திருந்தால்..!" - பாஜக குறித்து நேதாஜி மகள்

``ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதிலிருந்து, அவர்களின் சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என்பதை ஒப்புக்கொள்வேன்." - நேதாஜி மகள்

Published:Updated:
நேதாஜி, அனிதா போஸ்-பாஃப்

ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவரான, நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கொல்கத்தாவிலுள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் நாளை உரையாற்றவிருக்கிறார்.

நேதாஜி
நேதாஜி

இந்த நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் (Anita Bose-Pfaff), தன்னுடைய தந்தை ஓர் இடதுசாரி என்றும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவரைப் பிரதிபலிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

பிரபல ஊடகமொன்றுக்கு ஜெர்மனியிலிருந்து தொலைபேசி வாயிலாகப் பேட்டியளித்த அனிதா போஸ்-பாஃப், ``நேதாஜி கூறியபடி, அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதை பா.ஜ.க-வும், ஆர்.எஸ்எஸ்ஸும் பிரதிபலிக்கவில்லை. அவர்கள் இதைப் பிரதிபலிக்கவேண்டிய அவசியமில்லை.

அனிதா போஸ்-பாஃப் - நேதாஜி மகள்
அனிதா போஸ்-பாஃப் - நேதாஜி மகள்

இதில் நீங்கள் எளிதாக முத்திரைக் குத்த விரும்பினால்... அவர்கள் வலதுசாரிகள், நேதாஜி இடதுசாரி. ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதிலிருந்து, அவர்களின் சித்தாந்தமும் நேதாஜியின் சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் என்பதை நான் ஒப்புக்கொள்வேன். ஆர்.எஸ்.எஸ்., நேதாஜியின் மதச்சார்பின்மை சித்தாந்தம் ஒன்றோடொன்று ஒத்துப்போவதில்லை.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக
ஆர்.எஸ்.எஸ் - பாஜக

நேதாஜியின் லட்சியங்களையும், சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நினைத்தால் நிச்சயமாக அது நல்லது. அதேசமயம், நேதாஜி இன்று உயிருடன் இருந்து, அரசாங்கத்தின் பார்வையிலிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பா.ஜ.க அவரை கௌரவித்திருக்காது" என்றார்.