Published:Updated:

நன்றி சொல்ல வந்த ராம்நாத் கோவிந்த்; கேமராவையே பார்த்துக்கொண்டிருந்தாரா மோடி?! - உண்மை என்ன?

ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை ( ட்விட்டர் )

ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில், அவர் நன்றி தெரிவிக்கும்போது பிரதமர் மோடி அவரைக் கண்டுகொள்ளாமல் கேமராவையே பார்த்துகொண்டிருந்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

நன்றி சொல்ல வந்த ராம்நாத் கோவிந்த்; கேமராவையே பார்த்துக்கொண்டிருந்தாரா மோடி?! - உண்மை என்ன?

ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவில், அவர் நன்றி தெரிவிக்கும்போது பிரதமர் மோடி அவரைக் கண்டுகொள்ளாமல் கேமராவையே பார்த்துகொண்டிருந்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:
ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை ( ட்விட்டர் )

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தப் பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் வருகைக்காக பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் எழுந்து நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக, கையெடுத்துக் கும்பிட்டபடி நடந்து வந்தார். அப்போது முன்னால் நின்றுகொண்டிருந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது மோடி, ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்ததை கவனிக்காமல் கேமராவையே உற்று பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சில விநாடிகள் அவரருகே நின்ற ராம்நாத் கோவிந்த், பிரதமர் தன்னைப் பார்க்காததைக் கண்டு அடுத்த நபரிடம் நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த வீடியோ பதிவை ட்விட்டரில் ஷேர் செய்து விமர்சனம் செய்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், ``முழுமையான வீடியோ காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்த்துக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது முதலில், மோடி ராம்நாத் கோவிந்த்துக்கு வணக்கம் சொல்கிறார். பின்னர்தான் அவரைக் கடந்து செல்கிறார். ட்ரிம் செய்யப்பட்ட வீடியோவைத்தான் பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாகப் பதிவிட்டுள்ளனர்” என பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்தை வாழ்த்திய புகைப்படம் ராம்நாத் கோவிந்த்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.