Published:Updated:

``செய்தியாளர்களைச் சந்திக்காத திரௌபதி முர்மு; மோடியும் ஒரு காரணம்..!" - சொல்கிறார் யஸ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

`இப்போதெல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய இரண்டும் மிகவும் அப்பட்டமாக வெட்கமின்றி பயன்படுத்தப்படுகின்றன.' - யஷ்வந்த் சின்ஹா

``செய்தியாளர்களைச் சந்திக்காத திரௌபதி முர்மு; மோடியும் ஒரு காரணம்..!" - சொல்கிறார் யஸ்வந்த் சின்ஹா

`இப்போதெல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய இரண்டும் மிகவும் அப்பட்டமாக வெட்கமின்றி பயன்படுத்தப்படுகின்றன.' - யஷ்வந்த் சின்ஹா

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா ( ட்விட்டர் )

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்னும் ஐந்து நாள்களில் நடைபெறவிருக்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தங்களுக்கான ஆதரவைத் திரட்ட, மாநிலக் கட்சிகளைச் சந்தித்துவருகின்றனர். மறுபுறம் தேர்தல் ஆணையமும், தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், ஹரியானா மாநில எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவை, சண்டிகரில் அவரது இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``கடந்த 60 ஆண்டுகளில், இப்போது பார்க்கும் அரசு நிறுவனங்களின் தீவிரத்தை நான் பார்த்ததேயில்லை. வாஜ்பாயின் அரசில் நான் ஐந்து ஆண்டுகள் இருந்தேன். அப்போதெல்லாம், அரசியல் எதிரிகளுக்கு எதிராக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியதேயில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிபிஐ
சிபிஐ

மேலும், அந்த நாள்களிலெல்லாம், இது போன்ற தவறான பயன்பாடுகளும் இருந்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய இரண்டும் மிகவும் அப்பட்டமாக வெட்கமின்றி பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., ஆளுநர் அலுவலகம் போன்ற அமைப்புகள், எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் முனைப்பில் இருக்கின்றன.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா
ட்விட்டர்

மேலும் தேர்தலில் வெற்றிபெற ஆளுங்கட்சி, பல மத சமூகத்தினரிடையே வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் தீய செயல்களில் இறங்கியிருக்கிறது. இது சமூக அமைதிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஆளுங்கட்சியின் `ஒரே கட்சி, ஒரே ஆட்சி' என்ற செயல்திட்டம், ஜனநாயக இந்தியாவை, கம்யூனிசத்தைப் பின்பற்றும் சீனாவைப்போல மாற்றுவதாகும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

மேலும் திரௌபதி முர்மு குறித்துப் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``ஆளுங்கட்சியின் வேட்பாளர் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பில்கூடப் பேசாதது வருத்தமளிக்கிறது. ஒருவேளை, கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்கூட பேசாத பிரதமரின் முன்மாதிரியை அவர் பின்பற்ற விரும்பலாம். இருப்பினும், திரௌபதி முர்முமீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.