Published:Updated:

`மேக்கே தாட்டூ விவகாரம் முதல் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு வரை' - பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர்

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற அறையில் இன்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தார்.

`மேக்கே தாட்டூ விவகாரம் முதல் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு வரை' - பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர்

நாடாளுமன்ற அறையில் இன்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தார்.

Published:Updated:
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழகம் தொடர்பான நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். அதன் பின்பு ஜூலை மாதம் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைக்கக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில், அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், நீட் விலக்கு மசோதா தொடர்பாகவும் பேசினார்.

காவிரி
காவிரி

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற பிரதமரின் அறையில் மூன்றாவது சந்திப்பு இன்று பிற்பகல் 1 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்போது பிரதமரிடம் பேசிய முதல்வர், டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்கு வர வேண்டும் என அழைப்பிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

அதில் குறிப்பாக,

* தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* மழை வெள்ள நிவாரணத்தொகையும், நலத் திட்டங்களுக்கான நிதியையும் அதோடு சேர்த்து ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

* கர்நாடகாவின் மேக்கே தாட்டூ அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது.

* அதேபோல மீனவர்கள் கொல்லப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

* நீட் விவகாரத்தால் மாணவர்கள் மாய்த்துக்கொள்கின்றனர். அதற்கு ஒரு முடிவு ஏற்படுத்த வேண்டும்.

என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism