Published:Updated:

அதிமுகவில் புதிய பொறுப்புகள்... எதன் அடிப்படையில் நியமனம்? - ஒரு பார்வை!

அதிமுக-வில் புதிய பொறுப்புகள்

எதன் அடிப்படையில் இந்தப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்...

அதிமுகவில் புதிய பொறுப்புகள்... எதன் அடிப்படையில் நியமனம்? - ஒரு பார்வை!

எதன் அடிப்படையில் இந்தப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்...

Published:Updated:
அதிமுக-வில் புதிய பொறுப்புகள்

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக, கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்-ஸை நீக்கியதைத் தொடர்ந்தது அவர் வகித்துவந்த பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், கட்சியின் பல புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது அவைத்தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன் வகித்துவந்த அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக மூத்த தலைவர் பொன்னையனும், அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

இந்த நிலையில் எதன் அடிப்படையில் இந்தப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

``இந்த அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க சமுதாய அடிப்படையில்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கே.பி.முனுசாமி. தர்மயுத்த காலத்தில்,ஓபி.எஸ்-ஸின் பக்கம் இருந்தவர், கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக மாறினார். அதைவிட ஒற்றைத் தலைமை முன்னெடுப்புகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். அந்த அடிப்படையில் அவர் துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் வகித்துவந்த பதவிக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த நத்தம் விசுவநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தவிர, நத்தம் விசுவநாதனும் தர்மயுத்த காலத்தில் பன்னீரின் பக்கம்தான் இருந்தார். ஆனால், ஒருசில அதிருப்திகளால், எடப்பாடி பக்கம் தாவியவர், அவர் ஒற்றைத் தலைமையாக வருவதற்கும் பக்கபலமாக இருந்தார். பொதுக்குழுவிலும்கூட தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக பன்னீரை விமர்சித்துப் பேசினார். அதற்குப் பிரதிபலனாக அவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல பொருளாளர் பொறுப்பு என்பது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ்-ஸிடம் இருந்ததால், அதே சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், பொருளாளருக்கு இருந்த வரவு-செலவு அதிகாரங்கள் இப்போது பொதுச்செயலாளருக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு, அதே சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குப் பக்கபலமாக இருப்பவர் என்கிற அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பாளராக மூத்த தலைவர் என்கிற அடிப்படையில் பொன்னையனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொன்னையனை அவைத்தலைவராக்கும் முயற்சியில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி.எஸ் அப்போது அதற்குத் தடையாக இருக்கவே, இருவருக்கும் பொதுவாக தமிழ்மகன் உசேன் அந்தப் பொறுப்புக்கு வந்தார். பின்னர், கொடுத்த பொறுப்பை எதற்கு எடுக்க வேண்டும், தவிர இஸ்லாமியருக்கான அங்கீகாரமாகவும் இருக்கட்டும் என அப்படியே விட்டுவிட்டார்கள்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

தவிர, அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் என முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்குப் பக்கபலமாக இருந்தது ஒருபுறம் இருந்தாலும், ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டியதன் மூலம் முக்குலத்தோர் சமூக மக்களிடம் எழும் அதிருப்தியைச் சமாளிக்கும் யுக்திதான் இது. தவிர சி.வி.சண்முகம், கே.பி.அன்பழன் என வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கட்சியில் சட்டரீதியாக எடப்பாடிக்கு பக்கபலமாக இருந்த சி.வி.சண்முகம் மாநில பொறுப்பில் இல்லாமல் இருந்தார். அதேபோல முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் அதிகமாக இருப்பதால் அதைச் சமாளிக்கும் யுக்தியாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகனுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மூத்த நிர்வாகி மற்றும் பட்டியல் சமூக அடிப்படையில் முன்னாள் சபாநாயகர் தனபால், சிறுபான்மையினரைப் பிரநிதித்துவப் படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாலகங்கா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் ஏற்கெனவே அமைப்புச் செயலாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அதேவேளையில், ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியைவிட்டு நீக்கியிருப்பதால் அவர் வகித்தவந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை தங்கமணிக்கு வழங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வரும் 17-ம் தேதி நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்'' என்றவர்கள் தொடர்ந்து

 தங்கமணி
தங்கமணி

``ஏற்கெனவே இரட்டைத் தலைமையாக இருந்தபோது சமூக அடிப்படையில் கட்சி செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழவும்தான், ஒற்றைத் தலைமையைக் கொண்டுவந்தோம். ஆனால், இப்போதும் குறிப்பிட்ட மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களே அதிகமான பொறுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக, பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை'' என்கிற முணுமுணுப்பும் அதிமுக வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.