Published:Updated:

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்... எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன?!

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்... எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன?!

புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

Published:Updated:
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்:

அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி கற்ற இவர் சிறு வயதிலேயே தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். தீவிர கட்சிப் பணிகளின் காரணமாக, கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றிருந்தார். அடுத்ததாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் குன்னம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அரியலூர் திமுக மாவட்டச் செயலாளரான இவர் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்
அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்

இதனையடுத்து, 2021-ம் ஆண்டு தேர்தலில் குன்னம் தொகுதியில் தேர்தலைச் சந்தித்த இவர், 1,03,922 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றியை அடுத்து இவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற இலாகா மாற்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். சிவசங்கருக்கு காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற மகன்களும் உள்ளனர். இவர், தோழர் சோழன் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போக்குவரத்துத் துறை அமைச்சர்:

தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சிறிய இடைவேளைக்குப் பின்னர், வரும் 6-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் தொடங்கும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த சூழலில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இலாகா மாற்றப்பட்டுள்ளார்கள்.

அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்
அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்

போக்குவரத்துத் துறை மீதான விவாதம் வரும் மே, 04-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் ஊதிய உயர்வு விவகாரம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கல் என்று தமிழக போக்குவரத்துத் துறையில் பல்வேறு சிக்கல்கள் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதுபோக, போக்குவரத்துத் துறையில் அதிகரித்துவரும் நஷ்டத்தைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நீடிக்கும் சிக்கல்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது . 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் இதுவரை வாங்கப்படவில்லை. பழைய பேருந்துகளைச் சரி செய்ய உதிரிப் பாகங்கள் வாங்குவதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

பேருந்துகள்
பேருந்துகள்
விகடன்

போக்குவரத்துத் துறையில் மட்டும் 1.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்கள். ஓய்வூதிய தாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பத்து மாத காலம் ஆகியும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அந்த துறையில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்லும் கடன் சுமை, துறையில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படாமல் உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதற்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கின்றார்.