Published:Updated:

காடுவெட்டி: ``ராமதாஸ் குடும்பம் கடைசிவரை குருவைப் பயன்படுத்திக்கொண்டது!" - ஆதரவாளர்கள் கோஷம்

காடுவெட்டி குரு நினைவிடம்

குருவின் நான்காம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தினர், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் என சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்சுருட்டி பகுதியில் நேற்றைய தினம் கூடினார்கள்.

காடுவெட்டி: ``ராமதாஸ் குடும்பம் கடைசிவரை குருவைப் பயன்படுத்திக்கொண்டது!" - ஆதரவாளர்கள் கோஷம்

குருவின் நான்காம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தினர், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் என சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்சுருட்டி பகுதியில் நேற்றைய தினம் கூடினார்கள்.

Published:Updated:
காடுவெட்டி குரு நினைவிடம்

அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டத்தை அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு. இவர் வன்னியர் சங்கத் தலைவராக இருந்ததுடன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தவர். `காடுவெட்டி குரு’ என அனைவராலும் அறியப்படும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் 25-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க-வினர் மே 25-ம் தேதியை குருவின் நினைவுதினமாக அனுசரித்துவருகின்றனர்.

காடுவெட்டி குரு மணிமண்டபம்
காடுவெட்டி குரு மணிமண்டபம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், அவருடைய நான்காம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தினர், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் என சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்சுருட்டி பகுதியில் நேற்றைய தினம் கூடினார்கள்.

காடுவெட்டி குருவின் மகள் அஞ்சலி செலுத்தினார்
காடுவெட்டி குருவின் மகள் அஞ்சலி செலுத்தினார்

காடுவெட்டி பகுதியில் குருவின் நினைவிடத்தில் ஏராளமானோர் கூடியதால், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். குருவின் நினைவிடத்துக்கு வந்த அவரின் ஆதரவாளர்கள் சிலர், ``குருவை கடைசிவரையிலும் பயன்படுத்திக்கொண்ட ராமதாஸ் குடும்பம்,

அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் கடைசி நேரத்தில் பார்க்கத் தவறிவிட்டது. அவர் இருந்திருந்தால் வன்னியர் மக்களுக்குக் காவல் தெய்வமாக இருந்திருப்பார்" என கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து, அங்கிருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.

காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு

மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மீன்சுருட்டி பகுதியைச் சுற்றியிருக்கும் 22 டாஸ்மாக் கடைகள் நேற்றைய தினம் மூடப்பட்டன.