Published:Updated:

அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்?- கலகலக்கும் கமலாலயம்!

இ.லோகேஷ்வரி
மலையரசு

கட்சியின் இமேஜை மாற்றலாம் என்று டெல்லித் தலைமை கருதுவதால், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி. நரசிம்மன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன

Kamalalayam
Kamalalayam

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதால், தமிழக பா.ஜ.க-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார்? என்கிற விவாதம் தொடங்கியுள்ளது. ``முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு நாகராஜன் ஆகியோருக்கான வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது.

tamilisai
tamilisai

அதேநேரம் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், கட்சியின் இமேஜை மாற்றலாம் என்று டெல்லித் தலைமை கருதுவதால், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி. நரசிம்மன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன'' என பாஜக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் ரேஸில் கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கே.டி.ராகவனை தலைவர் பதவியில் அமர்த்த டெல்லி தலைமை விருப்பப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அதற்கு காரணம்... ஆர்.எஸ்.எஸ்ஸின் ரெக்கமென்ட்தான். சென்னையில் இன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்றது. தமிழிசை உட்பட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் தலைவர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. கே.டி.ராகவன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினர் என்பதால் அவருக்கு பதவிகொடுக்க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விருப்பப்படுகின்றனர்.

KT Raghavan
KT Raghavan

ஆளுநர் பதவி கிடைத்த தமிழிசைக்கும் ராகவனுக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது என்பதால் அவரும் தன்னுடைய சாய்ஸாக ராகவனையே கூட்டத்தில் முன்னிறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலால் வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. உட்கட்சி பூசலை தவிர்க்கவே கே.டி.ராகவனை தலைவராக நியமிக்க பி.ஜே.பி. தலைமை விரும்பும் அதேவேளையில் தனக்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை வைத்து ராகவன் காய் நகர்த்தி வருகிறார் என மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர்.