Published:Updated:

தமிழகத்தில் என்.ஐ.ஏ 'அதிரடி' - தேசப் பாதுகாப்பா, பி.ஜே.பி உள்நோக்கமா?

nia
nia

மத்திய அரசின் உளவு அமைப்புகளில் முக்கியமானது மிலிட்டரி இன்டலிஜென்ஸ். அதில் உள்ள ஓர் உயரதிகாரிதான் தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கப்போவதாக தகவலைக் கசிய விட்டார்.

இனம்புரியாத பதற்றத்தில் தவிக்கிறது தமிழகம். என்.ஐ.ஏ-வின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் வேகம் எடுத்துள்ள நிலையில், இது தேசப் பாதுகாப்பு நடவடிக்கையா அல்லது அரசியல் நோக்குடைய காய் நகர்த்தலா என்ற கேள்வியும் வலுத்துவருகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/34dFEtk

ஆகஸ்ட் 22-ம் தேதி நள்ளிரவில் சோதனையைத் தொடங்கிய தமிழக போலீஸார், கோவை மாநகரத்தையே புரட்டிப்போட்டார்கள். பயங்கரவாதிகளாகக் கருதப்படும் ஆறு பேரின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியாயின. சோதனை நடந்துகொண்டிருக்கும்போதே, 'அந்தப் படங்களை போலீஸ் வெளியிடவில்லை' என்று கூறிய தமிழக டி.ஜி.பி திரிபாதி, உளவுத்துறையிடமிருந்து வந்த எச்சரிக்கையை மட்டும் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் 24-ம் தேதியும் சோதனை தொடர்ந்தது. தமிழகக் கடற்கரையோரம் உள்ள கலங்கரை விளக்கங்கள் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன.

இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 29-ம் தேதி கோவையின் உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் பகுதிகளில் சோதனையிட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள், ஐந்து பேரின் வீடுகளிலிருந்து லேப்டாப், மொபைல்போன்களுடன் சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அடுத்தடுத்து சோதனைகள், கைதுகள் என என்.ஐ.ஏ மிக வேகமாகச் சுற்றிச் சுழல்கிறது" என்று சொல்லி முடித்தனர்.

nia raid
nia raid

ஆனால், மேற்கண்ட விஷயங்களைப் பற்றிப் பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தரப்பு, "என்.ஐ.ஏ நடவடிக்கைகள் தேசப் பாதுகாப்பு தொடர்பானவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழகம், அமைதிப்பூங்காவாகத் திகழும் ஒரு மாநிலம். வட மாநிலங்களில் பயங்கரவாதம், மதவாதம் என்று அச்சுறுத்தலை யும் பிரிவினை வாதத்தையும் விதைத்து, ஓட்டு வங்கியை அதிகரித்த பி.ஜே.பி, அதே பாணியை தமிழகத்திலும் கையாள்கிறதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்.ஐ.ஏ-வின் நடவடிக்கைகள் தமிழகத்தில் செயற்கை யான பதற்றத்தை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தவதற்காக நடத்தப்படுகின்றனவா என்றும் சந்தேகிக்கிறோம்" என்றார்கள்.

இதுகுறித்து தமிழக அரசின் உளவுத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "மத்திய அரசின் உளவு அமைப்புகளில் முக்கியமானது மிலிட்டரி இன்டலிஜென்ஸ். அதில் உள்ள ஓர் உயரதிகாரிதான் தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கப்போவதாக தகவலைக் கசிய விட்டார். 'தமிழகத்தில் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவல்' என்ற தகவலும் இதே ரூட்டில்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு வந்தது. அதிலிருந்து தமிழகத்தில் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள், சாதாரண வழக்குகளில் கைதானவர்கள் என்று பல தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகிறோம்.

சொல்லப்போனால் மேலிருந்து வரும் அழுத்தங்களாலேயே இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், தமிழக போலீஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இப்படி அடிக்கடி 'ரெட் அலர்ட்' கொடுத்துக் கொண்டிருந்தால் போலீஸாரின் கவனம் குறைந்துவிடும். அதன் பிறகு, நிஜமாகவே ஒரு அலர்ட் மெசேஜ் வரும்போது அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு" என்றார்.

nia raid
nia raid

- 1998-ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அல்-உம்மா, சிமி உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களைப் பார்த்தது தமிழ்நாடு. 2001-க்குப் பிறகு அடங்கியிருந்த அடிப்படைவாத இயக்கங்கள், 2014-லிருந்து சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இதுகுறித்து உளவுத்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசியவை, சமூகச் செயற்பாட்டாளர்கள் தரப்பு என்ன சொல்கிறது? என்.ஐ.ஏ நடவடிக்கைகள் பற்றி பி.ஜே.பி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் த.மு.மு.க தரப்பினர் சொல்வது என்ன? - ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில் விரிவாக வாசிக்க > NIA பாய்ச்சல்! - பதற்றமா... பா.ஜ.க திட்டமா? க்ளிக் செய்க...

https://www.vikatan.com/government-and-politics/politics/nias-sudden-action-plans-is-it-a-real-threat-or-a-political-strategy

அடுத்த கட்டுரைக்கு