Published:Updated:

`டெல்லியில் 70 நாள்கள்; ஊட்டிக்கு`திடீர்' வருகை!' - 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஆ.ராசா

ஆ.ராசா
ஆ.ராசா

70 நாள்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தார்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா டெல்லியில் சிக்கிக்கொண்டார். விமானம், ரயில் உள்ளிட்ட அனைத்துவகையான போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் டெல்லியிலே இருந்துவந்தார்.

ஆ.ராசா
ஆ.ராசா

கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நீலகிரி மக்களுக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நாள்தோறும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தி.மு.க சார்பில் பெரிதாக நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என உடன்பிறப்புகள் ஆதங்கப்பட்டனர்.

2009 பெருமழை பாதிப்பின்போது களத்தில் நின்று உதவிய ஆ.ராசா கொரோனா நிவாரணத்துக்குத் தலைகாட்டவில்லை என்ற பேச்சு ராசாவின் காதுகளை எட்ட உடனடியாக தனது சொந்த நிதியிலிருந்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிக்கும் 80 டன் அரிசியை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஆ.ராசா
ஆ.ராசா

எனினும், ராசா உடனடியாக நீலகிரி தொகுதிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், 70 நாள்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தார்.

ஊரடங்கில் தலைகாட்டவில்லை; கேள்வியெழுப்பிய நீலகிரி மக்கள்! - 80 டன் அரிசியை அனுப்பிய ஆ.ராசா

விமான நிலையத்தில் அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்துறையினர், 7 நாள்கள் தனிமையில் இருக்க கேட்டுக்கொண்டனர். இதன் அடிப்படையில் அவர் தன்னை 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆ.ராசா
ஆ.ராசா

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், " டெல்லியிலிருந்து நீலகிரிக்கு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 நாள்கள் அவரை வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு