Published:Updated:

கலவரத்தில் முடிந்த தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு விழா; பதற்றத்தில் நீலகிரி திமுக!

கவுன்சிலர் நாகம்மாள்

கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதிவிக்கு தி.மு.க தலைமை அறிவித்தும், மறைமுகத் தேர்தலில் பதவி பறிபோன விரக்தியில் கவுன்சிலர் நாகம்மாள் நீலகிரி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கண்ணீருடன் போராட்டம் நடத்தினார்.

கலவரத்தில் முடிந்த தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு விழா; பதற்றத்தில் நீலகிரி திமுக!

கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதிவிக்கு தி.மு.க தலைமை அறிவித்தும், மறைமுகத் தேர்தலில் பதவி பறிபோன விரக்தியில் கவுன்சிலர் நாகம்மாள் நீலகிரி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கண்ணீருடன் போராட்டம் நடத்தினார்.

Published:Updated:
கவுன்சிலர் நாகம்மாள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, கவுன்சிலர் பதவியேற்பு என அனைத்தும் மிக அமைதியாகவே நடந்து முடிந்த நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு விழா கலவரத்தில் முடிந்திருக்கிறது.

மஞ்சூரில் கைகலப்பு
மஞ்சூரில் கைகலப்பு

நகராட்சிகளைப் பொறுத்தவரை ஊட்டி, குன்னூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு விழா எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்தது. ஆனால், கூடலூர் நகராட்சித் தலைவர் வேட்பாளராக தி.மு.க தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த வெண்ணிலாவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பரிமளா போட்டியிட்டார். மறைமுகத் தேர்தல் முடிவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பரிமளா வெற்றிப் பெற்று கூடலூர் நகர்மன்றத் தலைவராக தேர்வானார். இதனால் வெண்ணிலா மற்றும் அவர் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, கீழ் குந்தா பேரூராட்சி தலைவர் வேட்பாளராக நாகம்மாள் என்பவரை தி.மு.க தலைமை அறிவித்திருந்தது. மெஜாரிட்டி இருந்ததால் இவர் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த சத்தியவாணி நாகம்மாளை எதிர்த்துப் போட்டியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நாகம்மாள் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சத்தியவாணி 9 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்று கீழ் குந்தா பேரூராட்சி தலைவரானார். இதனால் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதனால், காவல்துறையினர் கட்சியினரை தாக்கினர்.

கவுன்சிலர் நாகம்மாள்
கவுன்சிலர் நாகம்மாள்

மஞ்சூர் நகரில் பதற்றம் ஏற்பட்டது. தி.மு.க கட்சித் தலைமை அறிவித்தும் சொந்தக் கட்சியினர் திட்டமிட்டே தோற்கடித்து விட்டனர் என கவுன்சிலர் நாகம்மாள் மற்றும் அவர் கணவர் நீலகிரி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பதிவியிலும் மாற்றம் நிகழ்ந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்டம்‌ முழுவதும் அதிருப்தி நிலவுவதால் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பதற்றமான சூழலே நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism