Published:Updated:

படிப்பு, பட்டம், சம்பளம், விதிமுறை மீறல்...! -நிர்பயா குற்றவாளிகள் சிறையில் செய்தது என்ன?

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

குற்றவாளிகளில் விநாயக், சிறை விதிமுறைகளை மீறியதற்காக 11 முறையும் முகேஷ் மூன்று முறையும் பவன் 8 முறையும் தண்டிக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்காக அக்ஷய் மட்டும் ஒரே ஒருமுறை சிறை விதிகளை மீறியிருக்கிறார்.

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரை, வரும் ஜனவரி 22-ம் தேதி தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் நான்கு பேரும் ஜெயில் எண் 3-ல் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் போலீஸார் ஷிப்ட் முறையில் இவர்களைக் கண்காணித்து வருகின்றனர். இவர்களில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார்.

திகார் சிறை
திகார் சிறை
`சதித் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை!'- எஸ்எஸ்ஐ கொலை பின்னணியை விவரிக்கும் போலீஸ்

இதற்கிடையே, சிறையில் நிர்பயா குற்றவாளிகள் என்னென்ன தவறுகளைச் செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளில் விநாயக், சிறை விதிமுறைகளை மீறியதற்காக 11 முறையும் முகேஷ் மூன்று முறையும் பவன் 8 முறையும் தண்டிக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்காக அக்ஷய் மட்டும் ஒரே ஒருமுறை சிறை விதிகளை மீறியிருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளில் முகேஷ் சிறையில் எந்த வேலையும் செய்யவில்லை. மற்ற மூவரும் சிறையில் வேலை பார்த்து கூட்டாக ரூ.1,37,000 சம்பாதித்துள்ளனர். அதிகபட்சமாக அக்ஷய் 69,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். வினய் 39,000 ரூபாயும் பவன் 29,000 ரூபாயும் சம்பாதித்துள்ளனர். இந்தத் தொகை அவர்களின் குடும்பத்தினரிடத்தில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

2016-ம் ஆண்டு பவன், அக்ஷய், முகேஷ் ஆகியோர் சிறையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கச் சேர்ந்துள்ளனர். ஆனால், மூன்று பேருமே பாஸ் ஆகவில்லை. 2015-ம் ஆண்டு வினய் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.

ஒருவரைத் தூக்கிலிட ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.
திகார் சிறை வட்டாரம்

இவரும் பட்டம் பெறவில்லை. தூக்கிலிடுவதற்கு முன்பாக இருமுறை குற்றவாளிகளை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவர். இந்தியாவில் ஒரே சமயத்தில் நான்கு பேர் தூக்கிலிடப்படுவது இதுவே முதன்முறை. குற்றவாளிகளை தூக்கிலிட மீரட் சிறையில் இருந்து பவான் ஜல்லார்ட் என்ற கேங்மேன் திகார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒருவரைத் தூக்கிலிட ரூ.15,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தமாக ரூ.60,000 சம்பளமாக ஹேங்மேன் பவான் ஜல்லார்டுக்கு வழங்கப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு