Published:Updated:

`` `ஜீரோ பட்ஜெட்' என ராகுல் காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம்" - நிர்மலா சீதாராமன் காட்டம்!

நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி ( vikatan )

`சொந்த வேலையையே முறையாகச் செய்யத் தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

`` `ஜீரோ பட்ஜெட்' என ராகுல் காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம்" - நிர்மலா சீதாராமன் காட்டம்!

`சொந்த வேலையையே முறையாகச் செய்யத் தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

Published:Updated:
நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி ( vikatan )

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கலவையான விமர்சமனங்களைப் பெற்றுவருகிறது. `மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்டில், மாத சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள் என யாருக்கும் ஒன்றுமில்லை' என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ``கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் வரியைக்கூட உயர்த்தவில்லை. வேளாண்துறைக்கான கடனுதவித் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வரி விதிப்பு மத்திய அரசின் நோக்கம் இல்லை. அனைத்துத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் 2022 -நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2022 -நிர்மலா சீதாராமன்

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களை ஏற்கிறோம். ஆனால், சொந்த வேலையையே செய்யத் தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பட்ஜெட்டைப் பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய பட்ஜெட்டை `ஜீரோ பட்ஜெட்' என ராகுல் காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism