Published:Updated:

``இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது” - நிதின் கட்கரி சொல்வதென்ன?

நிதின் கட்கரி

``இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது’’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யபீத் பல்கலைக்கழகத்தில் நிதின் கட்கரிக்கு நேற்று முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது" என்றார். அதிகரித்துவரும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளின் அடிப்படையில் அவ்வாறு அவர் தெரிவித்திருக்கலாம். தொடர்ந்து பேசியவர், ``மகாராஷ்டிரா மாநிலத்தில், விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்
Rogelio V. Solis

கிரீன் ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றிலிருந்து தயாரிக்கலாம். இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் மின்சாரம் வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும். கோதுமை, நெல், மக்காச்சோளம் பயிரிடுவதால் மட்டும் எந்த விவசாயியும் தனது எதிர்காலத்தை மாற்ற முடியாது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!