Published:Updated:

`பணத்தைவிட உயிர்தான் முக்கியம்!’ - அபராதத் தொகையைக் குறைக்கும் மாநிலங்கள் குறித்து நிதின் கட்கரி

பிரேம் குமார் எஸ்.கே.

கர்நாடகாவும், குஜராத் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அபராதக் குறைப்பு தொடர்பான உத்தரவைப் பார்த்து, உடனடியாக அதுபோன்று இங்கும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது.

Nitin Gadkari
Nitin Gadkari

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, செப் 1 -ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், பல வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபருக்கு டெல்லியில் லைசென்ஸ் இல்லாதது, புகை பரிசோதனை உள்ளிட்ட குற்றங்களுக்காக 23,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டது.

Representational image
Representational image

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட இந்தப் புதிய அபராதத் தொகை மக்களுக்கு பாரமாக உள்ளதாகப் பல மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. குஜராத் அரசு குறிப்பிட்ட 17 சாலை விதி மீறலுக்கான அபராதத் தொகையைக் குறைத்து, சட்டம் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் அபராதத் தொகையை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளன. டெல்லி அரசு, மற்ற மாநிலங்களின் செயல்பாடுகளைக் கவனித்துவருகிறோம் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, இதை உடனடியாக அமல்படுத்த முடியாது. ஏனென்றால், இது மக்களுக்கு கூடுதம் சுமையாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தது.

கர்நாடகாவும், குஜராத் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அபராதக் குறைப்பு தொடர்பான உத்தரவைப் பார்த்து, பின்னர் அதுபோன்று இங்கும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது. மேலும் மகாராஷ்டிரா, ஒடிஷா, கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், இந்த அபராதத் தொகையைத் தங்களின் மாநிலங்களில் குறைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

Representational image
Representational image

அபராதத் தொகை உயர்த்தப்பட்டது தொடர்பாக மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன்பு, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அபராதத் தொகை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்புகள் தொடர்பாகப் பேசிய அமைச்சர், ``இந்தக் கட்டண உயர்வை அரசு வருமானத்துக்காகச் செய்யவில்லை. மக்கள் உயிரை காக்கவே இந்தக் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டுவந்தோம்.

மாநில அரசுகள் அபராத கட்டணத்தைக் குறைக்க முடிவெடுத்தால், அதை அவர்கள் தாராளமாகச் செய்யலாம். மோட்டார் வாகன சட்டம் பொதுப் பட்டியலில்தான் வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதில் சட்டம் ஏற்றும் உரிமை இருக்கிறது. அதனால் அபராதம் மற்றும் தண்டனைகளைப் பொறுத்தவரை, மாநில அரசு முடிவெடுக்கலாம். மத்திய அரசுக்கு அபராத உயர்வு தொடர்பாக பாஸிட்டிவ் கருத்துகள்தான் வருகின்றன” என்றார்,

`பணத்தைவிட உயிர்தான் முக்கியம்!’ - அபராதத் தொகையைக் குறைக்கும் மாநிலங்கள் குறித்து நிதின் கட்கரி

சாலை விபத்திலிருந்து மீண்டு வந்தவர்களும் சாலை விபத்துகளில் தங்களின் சொந்தகளைப் பறிகொடுத்த பலரும், மாநிலங்கள் அபராதத் தொகையைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். உயிரின் மதிப்பை அறியாமல் செயல்படுவதாகவும் வணிக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு செவிசாய்க்காமல், புதிய கட்டண உயர்வை அமல்படுத்துங்கள் என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.