Published:Updated:

``2014-ல் தோற்ற பிறகு நிதிஷ் குமார் என்னிடம் உதவி கேட்டு கெஞ்சினார்!" - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

``2015 சட்டமன்றத் தேர்தலில் 'மகாத்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றிபெற அவருக்கு நான் உதவினேன்." - பிரசாந்த் கிஷோர்

``2014-ல் தோற்ற பிறகு நிதிஷ் குமார் என்னிடம் உதவி கேட்டு கெஞ்சினார்!" - பிரசாந்த் கிஷோர்

``2015 சட்டமன்றத் தேர்தலில் 'மகாத்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றிபெற அவருக்கு நான் உதவினேன்." - பிரசாந்த் கிஷோர்

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

பீகாரில் சமீபகாலமாக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி குறித்து விமர்சனம் செய்துவரும் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், கடந்த ஞாயிறு அன்று `ஜன் சூரஜ் அபியான்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ தூர பாதயாத்திரையைத் தொடங்கினார். இந்தப் பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்னரே, பீகாரின் புதிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் 5-10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கினால், தன்னுடைய பாதயாத்திரையை நிறுத்திவிடுவதாகவும், மீண்டும் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

ஆனால், அதன் பிறகு இரு தரப்பிலிருந்தும் எந்தவொரு பேச்சும் இது பற்றி வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரை விமர்சித்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் அவருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

நேற்றைய கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், ``2014 லோக் சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை டெல்லியில் சந்தித்து உதவி கேட்டுக் கெஞ்சினார். பிறகு, 2015 சட்டமன்றத் தேர்தலில் 'மகாபந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றிபெற அவருக்கு நான் உதவினேன். இன்று, எனக்கு அறிவுரை வழங்குமளவுக்கு அவருக்கு மன உறுதி இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

மேலும், 10-15 நாள்களுக்கு முன்னர் நிதிஷ் குமார் என்னை அவரின் இல்லத்துக்கு அழைத்தார் என்பதை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போது அவர் என்னைத் தன்னுடைய கட்சியை வழிநடத்தச் சொன்னார். ஆனால், அது சாத்தியமில்லை என்று நான் கூறிவிட்டேன். ஏனெனில், எந்தப் பதவிக்காகவும் நான் செய்த உறுதிப்பாட்டை என்னால் திரும்பப் பெற முடியாது" என்று கூறினார்.

2018-ல் நிதிஷ் குமாரால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், சேர்ந்த கொஞ்ச நாள்களிலேயே, கட்சியின் தேசிய துணைத் தலைவரானார். ஆனால், அதன் பின்னர் பல்வேறு விஷயங்களில் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.