Published:Updated:

``பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்!" - சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வான்

``இப்போதைக்கு பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்." - சிராக் பஸ்வான்

``பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்!" - சிராக் பஸ்வான்

``இப்போதைக்கு பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்." - சிராக் பஸ்வான்

Published:Updated:
சிராக் பஸ்வான்

பீகாரில் ஆளும் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். கூட்டணியிலிருந்து வெளியேறிய கையோடு, ஆளுநரைச் சந்தித்த நிதிஷ் குமார், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

நிதிஷ்குமார் - மோடி
நிதிஷ்குமார் - மோடி

பின்னர் அடுத்த திருப்பமாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் `மகாபந்தன்' கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், 243 இடங்களைக்கொண்ட பீகார் சட்டமன்றத்தில், மகாபந்தன் கூட்டணி 164 இடங்களைப் பெற்றிருக்கிறது. இதனால், `மகாபந்தன்' கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.

பீகார் அரசியலில் இப்படி அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் நிகழும் நிலையில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், ``நிதிஷ் குமார்மீதான நம்பகத்தன்மை என்பது தற்போது பூஜ்யமாக இருக்கிறது. உங்களுக்கு (நிதிஷ் குமார்) சித்தாந்தம் இருக்கிறதா இல்லையா? இப்போதைக்கு பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், மக்கள் புதிய ஆணையை வழங்க புதிய சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதோடு, அடுத்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாது" என்றார்.

இதற்கிடையில், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.