Published:Updated:

``நாட்டில் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் கைதுசெய்யப்படுவதில்லை, ஆனால்..!" - பாஜக-வைச் சாடிய மம்தா

மம்தா பானர்ஜி

`நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புபவர்கள் கைதுசெய்யப்படுவதில்லை' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

``நாட்டில் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் கைதுசெய்யப்படுவதில்லை, ஆனால்..!" - பாஜக-வைச் சாடிய மம்தா

`நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புபவர்கள் கைதுசெய்யப்படுவதில்லை' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற ஃபேக்ட் செக் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 2018-ம் ஆண்டு, ஜுபைர் பதிவிட்ட ஒரு ட்வீட் தொடர்பாக தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மா பேசிய சர்ச்சைக் கருத்தை வெளிக்கொண்டு வந்தது இவர்தான் எனக் கூறப்படுகிறது.

ஜுபைரின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முகமது ஜுபைர் - ஆல்ட் நியூஸ்
முகமது ஜுபைர் - ஆல்ட் நியூஸ்

இந்த நிலையில், பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி ஜுபைர் கைது விவகாரம் தொடர்பாக மத்திய அரசை சாடினார்.

``முகமது சுபைர், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை ஏன் கைது செய்தீர்கள்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? உண்மையைப் பேசுவது அல்லது உண்மையை வெளிப்படுத்துவது குற்றமா? இந்த ஆளும் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் ஏஜென்சிகளைப் பயன்படுத்தி துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது கைதுசெய்யப்படுவார்கள்.

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த பா.ஜ.க உறுப்பினர்கள், அதாவது நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புபவர்கள் கைதுசெய்யப்படுவதில்லை. அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சமூகங்களுக்கிடையில் பகைமையை உருவாக்குபவர்களை பா.ஜ.க தொட்டுகூட பார்க்கவில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களை எதிர்த்து போராடுபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!