Published:Updated:

``தாய்மொழி முக்கியம், இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் நோக்கம் இல்லை!'' - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்தி மொழியை மட்டும் தேசிய மொழியாக்கும் நோக்கம் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக, காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரியங்க் கார்கே கூறியிருக்கிறார்.

``தாய்மொழி முக்கியம், இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் நோக்கம் இல்லை!'' - ராகுல் காந்தி

இந்தி மொழியை மட்டும் தேசிய மொழியாக்கும் நோக்கம் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக, காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரியங்க் கார்கே கூறியிருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி

காங்கிரஸில் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் பலரும் முன்மொழிந்தபோதிலும், போட்டியிடப்போவதில்லை என்பதில் உறுதியாயிருந்த ராகுல் காந்தி, அதற்கான தேர்தலிலிருந்தும் விலகினார். அது ஒருபுறமிருக்க, மறுபக்கம் கட்சியை பலப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கும்விதமாக `பாரத் ஜோடோ' யாத்திரையை செப்டம்பர் 7-ல் தொடங்கினார்.

பாரத் ஜோடோ யாத்ரா - கர்நாடக
பாரத் ஜோடோ யாத்ரா - கர்நாடக

கிட்டத்தட்ட 30 நாள்களைக் கடந்துவிட்ட இந்த யாத்திரையில், ராகுல் காந்தி கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் மக்களைச் சந்தித்துவருகிறார். இடையில் மைசூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மழையில் நனைந்தபடி மக்களிடையே உரையாற்றினார். இந்த நிலையில், இந்தி மொழியை மட்டும் தேசிய மொழியாக்கும் நோக்கம் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக, காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரியங்க் கார்கே கூறியிருக்கிறார்.

பிரியங்க் கார்கே
பிரியங்க் கார்கே
ட்விட்டர்

பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் பல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களுடனான உரையாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்க் கார்கே, ``ராகுல் காந்தியுடன் கன்னடத்தின் அடையாளம் குறித்து விவாதம் நடந்தது. ​​அப்போது, ஒவ்வொருவரின் தாய்மொழியும் முக்கியம். அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பில் அனைவருக்குமே உரிமை உள்ளது. எனவே, இந்தி மொழியை மட்டும் தேசிய மொழியாக்கி, உங்கள் மொழியின் (கன்னடம்) அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி கூறினார்" எனத் தெரிவித்தார்.