அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அண்மையில், ``ஓர் இஸ்லாமிய ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அவருடைய பிரச்னையல்ல; மாறாக அது இஸ்லாமியத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்னை. இஸ்லாமியப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சமூகத்தில் கௌரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இவரின் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளானது.

இந்த நிலையில், நேற்றைய தினம் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``எந்த ஒரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு தெளிவாக உள்ளது. தலாக் வேண்டாம், சட்டப்படி விவாகரத்து கொடுங்கள். ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு வழங்கப்பட வேண்டும். சொத்தில் 50 சதவிகித பங்கை மனைவிக்கு கொடுக்க வேண்டும்'' என்றார்.
