Published:Updated:

`தண்ணீர் பிரச்னையை ஒரு ஃபார்முலாவை வைத்து மட்டும் சமாளிக்க முடியாது!' - மன்கிபாத் 2.0வில் மோடி

மோடி ( AIR )

தண்ணீர் சேமிப்பை மிகப்பெரும் மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:

`தண்ணீர் பிரச்னையை ஒரு ஃபார்முலாவை வைத்து மட்டும் சமாளிக்க முடியாது!' - மன்கிபாத் 2.0வில் மோடி

தண்ணீர் சேமிப்பை மிகப்பெரும் மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மோடி ( AIR )

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மன்கி பாத் என்ற பெயரில் வானொலியில் தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் பிரதமர் மோடி. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்தது. கடைசி உரையில் பேசிய மோடி, விரைவில் உங்களை (நாட்டு மக்கள்) மற்றொரு நிகழ்ச்சி மூலம் சந்திப்பேன் என்று கூறி விடைபெற்றிருந்தார்.

மோடி
மோடி
AIR

இந்தநிலையில், இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இன்று முதல்முறையாக மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார். மன்கி பாத் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் மக்களிடையே பேசுவதற்காக தாம் காத்திருந்ததாகக் கூறி உரையைத் தொடங்கிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நடத்தி முடித்ததற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், முதல்முறை வாக்காளர்களுக்கும் பெண் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், மக்கள் மீது தமக்கு என்றுமே நம்பிக்கை உண்டு என்றார். அதேபோல், புத்தக வாசிப்பு, அவசரநிலைப் பிரகடனம், தேர்தலுக்கு முன்பாக கேதர்நாத்துக்குப் பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார். அதேபோல், சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப்பெரும் பிரச்னையாக மாறிவிட்ட தண்ணீர் பிரச்னை குறித்து பேசிய மோடி, `நரேந்திர மோடி ஆப் மற்றும் Mygov ஆப் மூலம் கருத்துகள் தெரிவிப்பவர்களில் நிறைய பேர் தண்ணீர் பிரச்னையை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். நமது கலாசாரத்தில் தண்ணீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகள் தண்ணீர் பிரச்னையால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நமக்குக் கிடைக்கும் மழைப்பொழிவில் 8 சதவிகிதத்தை மட்டுமே நாம் சேமிக்கிறோம் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரலாம்.

மோடி
மோடி
AIR

தண்ணீரின் முக்கியத்துவத்தைக் கருதியே ஜல்சக்தி என்ற புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் தொடர்பான முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்கும் வகையில் அந்த அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீரை சேமிக்க நாடு முழுவதும் ஒரே ஒரு முறையை மட்டுமே நாம் பயன்படுத்த முடியாது. எனவே, நாட்டு மக்களுக்கு நான் 3 கோரிக்கைகளை வைக்கிறேன்.

1. நாடு முழுவதும் சுத்தத்தைப் பராமரிக்க மக்கள் ஒண்றிணைந்து மேற்கொண்ட பணியைப் போலவே, தண்ணீரை சேமிக்கவும் மக்கள் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குங்கள்.

மோடியின் 3 கோரிக்கைகள்
மோடியின் 3 கோரிக்கைகள்
AIR

2. தண்ணீரை சேமிக்க நாடு முழுவதும் பல நூற்றாண்டுகளாக பல்வேறு பாரம்பர்ய முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த பாரம்பர்ய தண்ணீர் சேமிப்பு முறைகள் குறித்து மக்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

3. தண்ணீர் சேமிப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அதற்காக முக்கியமான பங்களிப்பை ஆற்றிவரும் பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு தண்ணீர் சேமிப்பு முறைகள் குறித்து கடிதம் எழுதினேன்
மன் கி பாத் 2.0வில் மோடி

தண்ணீர் சேமிப்பில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மட்டுமே இது சாத்தியமாகும். தண்ணீர் சேமிப்பு குறித்த உங்கள் கருத்துகளை #JanShakti4JalShakti என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று மோடி பேசினார்.