Published:Updated:

டெல்லி: ``அரசியல் தலைவர்கள் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத் சிங் படங்கள்!"- அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

`குடியரசுத் தலைவர், பிரதமர்கள் மற்றும் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் பொதுவாக அரசு அலுவலகங்களில் காணப்படுகின்றன, ஆனால் இனி இது வழக்கமாக இருக்காது.' - கெஜ்ரிவால்.

டெல்லி: ``அரசியல் தலைவர்கள் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத் சிங் படங்கள்!"- அரவிந்த் கெஜ்ரிவால்

`குடியரசுத் தலைவர், பிரதமர்கள் மற்றும் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் பொதுவாக அரசு அலுவலகங்களில் காணப்படுகின்றன, ஆனால் இனி இது வழக்கமாக இருக்காது.' - கெஜ்ரிவால்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

கடந்த 23-ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ``டெல்லி அரசின் ஒவ்வோர் அலுவலகத்திலும், பொதுவாக அரசியல் தலைவர்கள், குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் ஆகியோரின் புகைப்படங்கள்தான் இருக்கும். ஆனால், இனி எந்த அரசியல்வாதியின் புகைப்படத்தையும் வைக்க மாட்டோம். அதற்கு பதிலாக டாக்டர் அம்பேத்கர், பகத் சிங்கின் புகைப்படங்கள் இருக்கும் என இன்று நான் அறிவிக்கிறேன். ஏனெனில், பாபா சாகேப் அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
சித்தரிப்புப் படம்

அவர்கள் இருவரும் ஒரே கனவுகள், இலக்குகளுக்காக வெவ்வேறு வழிகளில் செயல்பட்டவர்கள். ஏழை, பணக்காரன் என அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நான் நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.

பி.ஆர்.அம்பேத்கர் `இந்திய அரசியலமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இருந்தவர். குடியரசுத் தலைவர், பிரதமர்கள் மற்றும் முதலமைச்சர்களின் புகைப்படங்கள் பொதுவாக அரசு அலுவலகங்களில் காணப்படுகின்றன. ஆனால், இனி டெல்லி அலுவலகங்களில் இது வழக்கமாக இருக்காது’’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism