Published:Updated:

ஓ.பி.எஸ் தொகுதி: பழங்குடி மக்களுக்குப் பாதை இல்லை; சீரமைத்த 2 மாதங்களிலேயே சேதம்- தீர்வு கிடைக்குமா?

பழங்குடி கிராமம்

ஓ.பி.எஸ் ​சொந்தத் தொகுதி​க்கு உட்ட்ட​ பகுதி​ முதுவாக்குடி. அவரின் ஏற்பாட்டில்தான் ​இங்கு ​குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. போதிய ​நிதி ஒதுக்கீடு​ செய்யப்படாதது​, ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் பணி தள்ளிப்போனது. ​

ஓ.பி.எஸ் தொகுதி: பழங்குடி மக்களுக்குப் பாதை இல்லை; சீரமைத்த 2 மாதங்களிலேயே சேதம்- தீர்வு கிடைக்குமா?

ஓ.பி.எஸ் ​சொந்தத் தொகுதி​க்கு உட்ட்ட​ பகுதி​ முதுவாக்குடி. அவரின் ஏற்பாட்டில்தான் ​இங்கு ​குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. போதிய ​நிதி ஒதுக்கீடு​ செய்யப்படாதது​, ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் பணி தள்ளிப்போனது. ​

Published:Updated:
பழங்குடி கிராமம்

​தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடி பழங்குடி கிராமம் இருக்கிறது. ​ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலை​ கிராமத்துக்கு 13 கிலோமீட்டர் பாதை அமைக்கப்பட்டது. காலப்போக்கில்​​ மலையில் வளைந்து நெளிந்து செல்லும் கரடு முரடான மண்பாதையில் ​ஆபத்தான முறையில் ​மக்கள்​ உயிரை​ப்​ ப​ணய​​ம் வைத்து நடந்தும், ஜீப்பிலும் பயணம் செய்துவ​ந்தனர். ​​இந்த கிராமத்துக்கு சாலை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி பழங்குடிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. ​​

மலைப்பாதை
மலைப்பாதை

​இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 10 லட்சம்​ ரூபாய் மதிப்பீட்டில் மலைப்பாதை ​சீரமைக்கப்பட்டது. ​இந்த நிலையில் கடந்த ​ஒரு வாரமாக போடி மலைப்பகுதியில் மழை பெய்​கிறது. இதனால் மலைப்பாதை ​மழைநீரால் கரைந்து ​சேதமடைந்து கொண்டிருக்​கிறது. சீரமைக்கப்பட்ட பாதை பல இடங்களில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு பள்ளமா​கிவிட்டது. பாதையைச் சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், கடந்த சில நாள்கள் பெய்த மழைக்குக்கூட மலைப்பாதை தாக்குப்பிடிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

​பாதை சீரமைப்புப் பணி நட​ந்துகொண்டிருந்த​போ​தே​​​​​​ பாதை​யை ஒட்டி மழைநீர் வடிகால் அமைக்க​ப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. ​இதுதான் தற்போது பாதை மழைநீரில் கரைந்து செல்லக் காரணமாக அமைந்துவிட்டது. இந்தச் சீரமைப்புப் பணியை பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்துவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ​

போடி தொகுதி எம்எல்ஏ ஓபிஎஸ்
போடி தொகுதி எம்எல்ஏ ஓபிஎஸ்

​இங்கு சுமார் 40 பழங்குடியினக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களுக்கு மாநில அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள​ன. ​​அவை மராமத்து செய்யப்பட வேண்டும். முதல்வரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பேஸ்மட்டம் மட்டும் போடப்பட்ட நிலையில் கட்டடப் பணி கிடப்பில் போடப்பட்டது. ​அந்த வீடுகளையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என பழங்குடிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

ஓ.பி.எஸ்-ஸின் ​சொந்தத் தொகுதி​க்கு உட்பட்ட​ பகுதி​ முதுவாக்குடி. அவரின் ஏற்பாட்டில்தான் ​இங்கு ​குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. போதிய ​நிதி ஒதுக்கீடு​ செய்யப்படாதது​, ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் பணி தள்ளிப்போனது. ​ஆனால் ​தற்போது திமுக ஆட்சி வந்த பிற​கும் அமைச்சர்கள் பார்வையிட்டுச் சென்ற பிறகும் அதேநிலைதான் தொடர்கிறது. எங்கே அதிமுக ஆட்சியின் திட்டத்தைச் செயல்படுத்தினால் அவர்களுக்குப் பெயர் கிடைத்துவிடுமோ ​என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

முதுவாக்குடி
முதுவாக்குடி

இதற்காகக் குரல் கொடுக்கவேண்டிய, அந்த மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டிய தொகுதி எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்., 1​ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை இவிஎன் சாலை, பெருந்துறை சாலை சந்திப்புகள் இணையும் பகுதியில் ​​அதிமுக ஆட்சியின்போது மேம்பாலம் அமைத்து அதற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பாலத்துக்கான பெயர்ப் பலகை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளின்படி மறைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பெயர்ப் பலகை திறக்கப்படாமல் இருக்கிறது. அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை
அறிக்கை

சொந்தத் தொகுதி மக்கள் நடக்கவே பாதையின்றி இருக்கும் நிலையில், மேம்பாலத்துக்குப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என அவர் அறிக்கைவிடுத்திருப்பது போடி தொகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு பாதை அமைப்பதற்கும் அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா ஓ.பி.எஸ்?